சென்னை,
அகில
இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்
உள்பட 7 முக்கிய நிர்வாகிகள் பாரதீய ஜனதாவில் இன்று இணைந்தனர். இந்த
நிகழ்வு கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமத்துவ
மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில்,
சமத்துவ மக்கள் கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பு வகித்து வந்த
கரு.நாகராஜன், தலைமை நிலையச்செயலாளர் பதவியிலிருந்த ஐஸ் அவுஸ் தியாகு,
மாவட்டச்செயலாளர்கள் பொறுப்பிலிருந்த ராஜா, பிரசாத் உள்ளிட்டவர்கள் தத்தம்
பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும்
நீக்கப்படுகிறார்கள்.
மேலும் கட்சி விதிமுறைகளை மதிக்காமல் நடந்ததோடு, அதைப் பலமுறை சுட்டிக் காட்டியும் சிறிதும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த துணைத்தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ அப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். மேற்சொன்ன அனைவரோடும் இயக்கத் தோழர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சமத்துவ மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. dailyathanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக