வெள்ளி, 8 ஜனவரி, 2016

ஜி எஸ் டி மசோதா நிறைவேற காங்கிரசிடம் கையேந்தும் பாஜக

புதுடில்லி:'சரக்கு மற்றும் சேவை வரி மசோதா' என, அழைக்கப்படும்,
ஜி.எஸ்.டி., மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று ஆதரவு கோரினார். ஆனால், வெங்கையாவின் கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்ததை அடுத்து, ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறுவதில் இழுபறி நீடிக்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய, ஜி.எஸ்.டி., மசோதா, நீண்ட நாட்களாக பார்லிமென்டில் நிறைவேற்றப்படாமல், நிலுவையில் உள்ளது. ராஜ்யசபாவில், ஆளுங்கட்சியான பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதாவை நிறைவேற்ற
முடியவில்லை. உலக வங்கி எச்சரிக்கை என்பதே கண் துடைப்பு நாடகம். 18 சதவிகித ஜி எஸ் டி வரி என்பது சாமான்ய மக்களுக்கு மேலும் வரி தவிர வேறொன்றுமில்லை. இனி எல்லா மானியமும் கட் ஆகும். முதலில் யார் உண்மையான வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பயனாளிகள் என்று இந்த அரசு (மத்திய மற்றும் மாநில) ஒரு பட்டியல் ரெடி செய்து அவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்தாலே போதும் செய்வார்களா? அனால் அப்படி செய்தால் அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் இருக்கும் பணம் தின்று கொழித்த பெருச்சாளிகள் நிலைமை மோசமாகிவிடும்

முட்டுக்கட்டை
கடந்த குளிர்கால கூட்டத் தொடரில், இந்த மசோதாவை நிறைவேற்ற, ஆளுங்கட்சி தரப்பு, கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சி கள், இதற்கு முட்டுக்கட்டை போட்டன.
'ஜி.எஸ்.டி., மசோதாவில், மூன்று முக்கிய திருத்தங்களை மேற்கொண்டால், அதை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்க தயார்' என, காங்கிரஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது; இதை ஏற்பதற்கு, ஆளுங்கட்சி தரப்பு தயங்கியது.
இதேபோல், மற்றொரு முக்கிய மசோதாவான, ரியல் எஸ்டேட் மசோதாவையும், மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
'ஜி.எஸ்.டி., மசோதாவை விரைவில் நிறைவேற்றாவிட்டால், பொருளாதார ரீதியான பாதிப்புகளை, இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும்' என, சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதற்கிடையே, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், அடுத்த மாதம் துவங்க உள்ளது. 'இந்த கூட்டத் தொடரிலாவது, இந்த இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்ற வேண்டும்' என்பதில், அரசு தரப்பு உறுதியாக உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. பா.ஜ., மூத்த தலைவரும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சருமான வெங்கையா நாயுடு, டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வீட்டுக்கு சென்று, அவரை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு, 20 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, ஜி.எஸ்.டி., மற்றும் ரியல் எஸ்டேட் மசோதாக்களை
நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி, சோனியாவிடம், அமைச்சர் வெங்கையா நாயுடு, வலியுறுத்தினார். இதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் என்ற முறையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து, ஜி.எஸ்.டி., மற்றும் ரியல் எஸ்டேட் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு கேட்டேன். அப்போது, ஜி.எஸ்.டி.,மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளும்படி, தங்கள் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதாகவும், இதில், அரசின் நிலைப்பாடு என்ன என்றும், சோனியா கேள்வி எழுப்பினார்.
இந்த விஷயத்தில், அரசின் நிலை என்ன என்பதை, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாக கூறினேன். மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளித்தால், பட்ஜெட் கூட்டத் தொடரை முன்கூட்டியே கூட்ட, தயாராக இருப்பதாகவும் தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
'பதில் இல்லை': இதுகுறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கபில் சிபல் கூறியதாவது:காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களை ஏற்பது தொடர்பாக, அரசிடமிருந்து எந்த உறுதியான பதிலும் இல்லை. ஒரு பக்கம், சமரச துாது விடுகின்றனர்; மற்றொரு பக்கம், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'ராஜ்யசபாவில் காங்கிரசின் பலம் குறைந்து வருவதால், ஜி.எஸ்.டி., மசோதா எளிதில் நிறைவேறும்' என்கிறார்.
பா.ஜ.,வின் திட்டம் என்ன என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. ஜி.எஸ்.டி., மசோதாவில் திருத்தம் செய்ய, ஆர்.எஸ்.எஸ்., எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் தான், திருத்தங்களை ஏற்க, பா.ஜ.,மறுக்கிறது. மசோதா நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், வெங்கையா நாயுடுவுக்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடி வந்து, சோனியாவை சந்தித்திருக்கலாமே. எங்களின் கோரிக்கையை ஏற்காதவரை, ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற, ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி., மசோதாஏன்?பொருட்களை உற்பத்தி செய்து, விற்கும்போது, அவற்றின் மீது, சேவை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்துக்கு பொருட்களை கொண்டு சென்றால், அதற்கு நுழைவு வரியும், மதிப்பு கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது. ஒரு பொருளின் மீது, பல்வேறு விதமான வரிகள் விதிக்கப்படுவதால், பொதுமக்களுக்கு வரிச்சுமை ஏற்படுகிறது. வரி கட்டமைப்பு முறைகளும் குளறுபடியாகின்றன. இவற்றை தடுக்க, பல்வேறு வரிகளை ஒருங்கிணைத்து, ஒரே விதமான வரி விதிக்க வகை செய்வது தான், ஜி.எஸ்.டி., மசோதா. தினமலர.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக