வெள்ளி, 8 ஜனவரி, 2016

நெல்லை சுற்றுலா பஸ் கவிழ்ந்து 10 பேர் மரணம்

நெல்லை : நெல்லை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
10 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் பஸ் டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் பஸ், திருநெல்வேலி அருகே பனக்குடியை அடுத்து பிளாக்கோட்டை பாறையில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட10 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.



விபத்துக்கான காரணம்: டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தால் நெல்லை-நாகர்கோயில் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக