ஞாயிறு, 17 ஜனவரி, 2016

உச்ச நீதிமன்ற தடையை மீறி ஆந்திர முதல்வர் சந்திரபாபு ஊரில் மஞ்சு விரட்டு !

சித்தூர்: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போல் ஆந்திர மாநிலத்தில் சங்காராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். நேற்று மாட்டுப் பொங்கல் தமிழகம் மற்றும் ஆந்திராவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனிடையே உச்ச நீதிமன்ற தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. despite the ban of jaallikattu in andra இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள புள்ளயாகாரு பள்ளி கிராமம் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊர். அந்த கிராமத்தில் நேற்று ஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாடுகளின் கொம்புவில் அதன் உரிமையாளர்கள் கழுத்தில் பரிசுத்தொகையை கட்டி தெருவில் ஓட விட்டனர். அப்போது கிராமத்து இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாட்டின் பின்னால் ஓடி பரிசுத்தொகையை எடுக்க முயற்சித்தனர். இந்த போட்டிகளில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மஞ்சுவிரட்டை பார்வையிட திருப்பதி, சந்திரகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர். முன்னதாக மஞ்சுவிரட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பதாகவும், மஞ்சுவிரட்டு நடத்த கூடாது என்றும் காவல்துறையினர் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி மஞ்சு விரட்டு போட்டி நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு போராட்டங்கள் தொடரும் நிலையில், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் முதல்வரின் சொந்த ஊரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சேவல் சண்டைக்கு ஆந்திர உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தடை விதித்துள்ளது. ஆனால் தடையை பொருட்படுத்தாமல் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரில் நடைபெற்ற சங்கராந்தி விழாவில் சேவல் சண்டை நடத்தப்பட்டது.
://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக