ஞாயிறு, 17 ஜனவரி, 2016

இந்திய முதியவரை தாக்கிய அமெரிக்க போலீஸ் விடுதலை....

வாஷிங்டன்,ஜன.15
(டி.என்.எஸ்) அமெரிக்காவில் இந்திய முதியவரை தாக்கிய வழக்கில், அந்நாட்டு போலீஸ் ஒருவருக்கு நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளது.
அமெரிக்காவில் அலபாமா மாகாணம், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் தங்கி என்ஜினீயர் வேலை பார்த்து வருகிற தனது மகனை பார்ப்பதற்காக சென்றவர், இந்தியர் சுரேஷ் பாய் படேல் (வயது 57).
இவர் அங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6–ந் தேதி, நடைப்பயிற்சி சென்றபோது, சந்தேகத்தின் அடிப்படையில் எரிக் பார்க்கர் என்ற போலீஸ் அதிகாரி சுற்றி வளைத்து கேள்வி கேட்க, அவருக்கு ஆங்கில மொழி தெரியாததால் சரியாக பதில் அளிக்க முடியாமல் போய்விட்டது. அவரை அந்த போலீஸ் அதிகாரி தாக்கி, கீழே தள்ளி படுகாயப்படுத்தினார். அதில் அவர் முடமானார்.

இது நமது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய அரசு இது குறித்து அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பியது. அலபாமா கவர்னர், நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக போலீஸ் அதிகாரி எரிக் பார்க்கர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டு, சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என கூறி, விடுதலை செய்து நீதிபதி மடேலின் ஹியூஸ் தீர்ப்பு அளித்தார்.//tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக