ஞாயிறு, 24 ஜனவரி, 2016

இந்தியாவும் பிரான்ஸ் இணைந்து தீவிரவாத்திற்கு எதிராக போராடும்: பிரதமர் மோடி

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக வந்துள்ள
பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே இன்று பிற்பகல் அரியானா மாநில தலைநகரான சண்டிகரை வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு நடந்த  இந்தியா- பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மாநாட்டில் ஹாலண்டேயும், மோடியும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி தொழில் செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியாவை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான நேரம். எனவே இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

இன்றைய சூழ்நிலையில் மனிதக்குலம் தீவிரவாதத்தாலும், பருவநிலை மாற்றத்தாலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மோசமான தீவிரவாத தாக்குதலை எதிர்க்கொண்ட நிலையிலும் பிரான்ஸ் தனது மனிதநேய கொள்கைகளை கைவிடாமல் உறுதியாக இருந்து. இந்தியாவும் பிரான்ஸ் நாடும் இணைந்து திவிரவாத்திற்கு எதிராக போராடும்.
பிரான்ஸ் உடன் இணைந்து பணியாற்றவும், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு உழைக்கவும் இந்தியா ஆர்வமாக உள்ளது.” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக