ஞாயிறு, 24 ஜனவரி, 2016

அமெரிக்கா: கொலை வழக்கில் சீக்கியருக்கு 82 ஆண்டு சிறை

சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்காவில் சேக்ரமென்டோ நகரில் உள்ள
விளையாட்டு வளாகத்தில் 2008–ம் ஆண்டு, ஆகஸ்டு 31–ந்தேதி ஒரு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது பரம்ஜித்சிங் (வயது 26), சாகிப்ஜித் சிங் என்னும் இரு சீக்கியர்களை அமன்தீப் சிங் தாமி, குர்பிரீத் சிங் கோசல் ஆகிய இரு சீக்கியர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பரம்ஜித் சிங் கொல்லப்பட்டார். சாகிப்ஜித் சிங் காயங்களுடன் உயிர் தப்பினார்.  திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி அமன்தீப் சிங் தாமி தப்பி விட்டார். குர்பிரீத் சிங் கோசல் பொதுமக்களிடம் சிக்கி, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.  தப்பிய அமன்தீப் சிங் தாமி, இந்தியாவுக்கு வந்து விட்டார். அவர் பஞ்சாப்பில் 2013–ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை சேக்ரமென்டோ நகர் சுபிரீயர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் பரம்ஜித் சிங்கை கொன்றும், சாகிப்ஜித் சிங்கை காயப்படுத்தியும் குற்றம் புரிந்த அமன்தீப்சிங் தாமிக்கு 82 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ரிச்சர்டு சூயோஷி தீர்ப்பு அளித்தார்.  குர்பிரீத் சிங் கோசலுக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக