வெள்ளி, 8 ஜனவரி, 2016

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது அமலாக்க இயக்குநரகம்.வி காவேரி மாறன் உள்பட 6 பேர் மீது அமலாக்க இயக்குநரகம் தனது குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளது. 2011- ஆம் ஆண்டு ஏர்செல் உரிமையாளர் சி.சிவசங்கரன், மேக்சிஸ் நிறுவனத்துக்கு பங்குகளை விற்குமாறு தனக்கு அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சிபிஐ-யிடம் புகார் அளித்ததையடுத்து இந்த வழக்கில் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் விசாரணை அதிகாரிகளின் பார்வைக்கு வந்தது.

இதனையடுத்து அதே 2011-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதாவது அலைவரிசை உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்த ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் தனது நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க கடும் நெருக்கடி கொடுத்ததாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
மார்ச் 2006-ல் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை வாங்கியிருந்த மேக்சிஸ் நிறுவனம் 2007-2009 ஆம் ஆண்டுகளுக்கிடையே சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.742 கோடி முதலீடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை குறித்த பரிசீலினை வரும் 18 ஆம் தேதி செய்யப்படும் என்று சிபிஐ அமைப்பை இது குறித்த ஆவணங்களை தயாராக வைத்திருக்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக