ஞாயிறு, 24 ஜனவரி, 2016

விஜயதரணி :என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன்....அதிமுகவின் புதிய கொபசே......என்ன கொடுமையடா?

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதாரணி மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாள் நடைபெற்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சட்டசபை கூட்டம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா வெளியில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.  அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்று ஒரு மனுவை கொடுத்தார்.பிறகு உங்களை தனியாக சந்தித்து பேச விரும்புகிறேன் என்று விஜயதரணி கூறினார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா சிரித்துக் கொண்டே சரி, பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.  சபாஷ் சரியான போட்டி....கூத்து நடக்கட்டும்...நாட்டுக்கு ரொம்ப தேவை பாருங்க 
மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து நேற்றிரவு அதிரடியாக நீக்கப்பட்ட விஜயதாரணி, இதற்கு டெல்லி சென்று நியாயம் கேட்கப் போவதாக கூறி வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதாவை தனியாக சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையப்போகிறாரே என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக நாளிதழில் 'சாட்டை' என்ற பெயரில் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் விஜயதாரணி. அவர் மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டேன் என்றும் கூறி வந்தார். இந்த நிலையில் திடீரென முதல்வரிடம் மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தேமுதிகவில் அதிமுக (ஜெ) அணி ஒன்று உதயமாகி அக்கட்சிக்கு குடைச்சலை கொடுத்து வருகிறது. காங்கிரஸிலும் தற்போது ஜெ. அணி எம்.எல்.ஏ.வாக விஜயதாரணி செயல்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vijayadharani-meets-jayalalitha-after-sacked-from-party-post-245130.html
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டத்தொடர் முடிந்த பிறகு சந்தித்துப் பேசினார்.
விஜயதாரணி காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி காரணமாக முதல்வரை சந்தித்திருக்கலாம் என்றும், அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி. அவர் ஆரம்பத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளராக இருந்தார். இதனால் கட்சி மேலிடம் விஜயதாரணியை தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்தது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாயிலில் மகளிர் காங்கிரஸ் சார்பில் கடந்த ஆண்டு 19-ம் தேதி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த விஜயதாரணியின் படத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதற்குப் பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கக்கோரி சோனியா, ராகுல் காந்திக்கு விஜயதாரணி கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து இளங்கோவன், விஜயதாரணியை டெல்லிக்கு அழைத்து கட்சி மேலிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், விஜயதாரணியை தமிழக காங்கிரஸ் மகளிர் பதவியிலிருந்து கட்சி மேலிடம் நீக்கியுள்ளது. மறைந்த காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டத்தொடர் முடிந்த பிறகு விஜயதாரணி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
முதல்வர் சந்திப்பு குறித்து விஜயதாரணி கூறுகையில், ''முதல்வரிடம் தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். என் பதவி பறிக்கப்பட்டது அநியாயம். இதை கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன்'' என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக