ஞாயிறு, 24 ஜனவரி, 2016

கள்ளகுறிச்சி: 3 மாணவிகள் தற்கொலை ! கல்லூரி மோசடி...பணத்தை கொள்ளையடித்துவிட்டு நடுரோட்டில் விட்ட கல்லூரி

விழுப்புரம்மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவிகள் 3 பேர்
கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தற்கொலை செய்து கொண்ட சென்னையை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா (19), காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா(19), திருவாரூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா (19) ஆகிய 3 பேரும், பங்காரத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தனர். இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று அக்கல்லூரின் அங்கீகாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் 3 பேர் உள்பட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தலா ரூபாய் 2 லட்சம் கட்டி படித்து வந்தனர். பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த விரத்தியில் 3 மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இந்த உப்புமா மருத்துவ கல்லூரி பற்றி விபரமாக அறிய  www.vinavu.com/2015/10/09/svs-medical-college-of-yoga-and-naturopathy-in-kallakurichi-fleece-students/
இதுதொடர்பாக சின்னசேலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி நிர்வாகி வாசுகி சுப்பரமணியன் மகன் சுவாகர் அதே கல்லூரியில் படித்து வருவதாகவும் சந்தேகத்தின் பேரில் சுவாகரை சின்ன சேலம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

;இதே கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் கடந்த 15.09.2015 அன்று 8 பேர் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று மண்எண்ணெய் கேனையும், தீப்பெட்டியையும் பிடுங்கி அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் 8 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அய்யப்பன், கண்ணதாசன், கோமளா, சிவசங்கரி, தமிழ்மகள், நர்மதா, பானுப்பிரியா, மணியரசி என்பதும் கள்ளக்குறிச்சி அருகே பங்காரத்தில் உள்ள தனியார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது."

இதனை தொடர்ந்து அவர்கள் 8 பேரையும் போலீசார், கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர். அப்போது கலெக்டர் லட்சுமியிடம் அவர்கள் கூறியதாவது, நாங்கள் படித்து வந்த கல்லூரியில் அடிப்படை வசதி ஏதும் இல்லை. பாடம் நடத்துவதற்கு ஒரு மருத்துவர் கூட கிடையாது. நோயாளிகள் என்று ஒருவர் கூட வருவதில்லை. நூலகம், விடுதி வசதி மருத்துவ உபகரணம், குடிநீர், போதிய வகுப்பறை வசதி இப்படி எந்தவொரு அடிப்படை வசதிகளும் கிடையாது. மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, கல்வி கட்டண முழு தொகை ஆகியவை இத்துறையால் எங்கள் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. ஆனால் மாணவ– மாணவிகளாகிய எங்களுக்கு எந்த உதவித்தொகையையும் கல்லூரி நிர்வாகம் தரவில்லை.

இவற்றை சுட்டிக்காட்டிய எங்களை கல்லூரியை விட்டு நீக்கிவிட்டனர். எனவே கலெக்டர் இதில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், அதே வேளையில் எங்கள் படிப்பை தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பல மாதங்களாக இந்த பிரச்சனை நடந்து வந்துள்ளது. அதிகாரிகள் உரியநேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் 3 உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்.">எஸ்.பி.சேகர், பகத்சிங், சிவசுப்பிரமணியன்  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக