புதன், 20 ஜனவரி, 2016

ஸ்மிருதி இரானி: தலித் மாணவர் தற்கொலைக்கு ஜாதி சாயம் பூசுவதா?

டெல்லி: ஹைதராபாத்தில் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்த விவகாரத்தை தலித் முத்திரை குத்தி ஜாதி பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டார். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில், பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி நிர்வாகிகளை தாக்கியதாக அம்பேத்கர் மாணவர் அமைப்பை சேர்ந்த ரோகித் வெமுலா உட்பட 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், ரோகித் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். This was not a Dalit vs non-Dalit matter: Smriti Irani இந்த விவகாரத்தை தலித் மாணவர் தற்கொலை என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் அணுகிவரும் நிலையில், அவ்வாறான போக்கு சரியில்லை என்று ஸ்மிருதி இரானி இன்று தெரிவித்தார்.
 மேலும் அவர் கூறுகையில், ஜாதி பிரச்சினையாக மாற்ற யாரும் முயல வேண்டாம். ரோகித்தை சஸ்பெண்ட் செய்த வார்டனும் தலித் பிரிவை சேரந்தவர்தான். மாணவர்களை சஸ்பெண்ட் செய்தது நியாயமான நடவடிக்கை என பல்கலைக்கழகம் கூறுகிறது. எனவேதான், சஸ்பெண்ட் தண்டனையை எதிர்த்து, மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. ரோகித் தனது தற்கொலை கடிதத்தில் கூட, யாரையும் குற்றம் சாட்டவில்லை. செகந்திராபாத் பாஜக எம்.பியும் அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், எனவே அவரையும் குற்றவாளியாக கருதி பதவியிலிருந்து விலக்குமாறும் காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஹனுமந்தராவ் இதுபோன்ற கடிதங்களை ஏற்கனவே எழுதியுள்ளார். ஹைதராபாத் பல்கலையில் நடைபெறும் முறைகேடுகளை அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்

/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக