திங்கள், 18 ஜனவரி, 2016

ஈரானில் தினமும் 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...பொருளாதார தடை நீக்கம்...பெட்ரோல் விலை மேலும் குறையும்

Saudi-Iranian Rift Guarantees Oil Overproduction Will Continue; Crisis Possible In Strait Of Hormuz
ஆறு நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து பொருளாதார தடைகளையும் நீக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஈரான் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை பெட்ரோலியத்துறை துணை மந்திரி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் சரிவை கண்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 28.74 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக