ஸ்மார்ட் நகரங்களின் முக்கிய அம்சங்கள்
திட்டமிடப்படாத பகுதிகளில் திட்டமிட்ட கட்டிடங்கள் அமைத்தல்.
அனைவருக்கு வீடு கிடைப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது
பல்வேறு வகையான போக்குவரத்து வாய்ப்புக்களை உருவாக்கித் தருதல்
நகரத்தில் நெருக்கடியை குறைப்பது, காற்று மாசைத் தடுப்பது, வாகனம்
செல்லும் சாலைகளை உருவாக்குவது அல்லது புதுப்பிப்பது மட்டுமின்றி நடந்து
செல்வோருக்கான பாதைகள் அமைக்கப்பட்ட நிர்வாகம் தொடர்புடைய பணிகள்
நடைதூரத்தில் கிடைக்கச் செய்தல்.
திறந்தவெளிகளை பாதுகாத்தல் மற்றும் உருவாக்குதல் - பூங்காக்கள்,
விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்கப்பட்டு
மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும்.
குறைந்த செலவிலும் மக்களுடன் நட்பாக இருக்கும் வகையில் நிர்வாகத்தை
அளித்தல் - ஆன்லைன் சேவைகளை அதிகரித்தல்
உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் துடிப்பான தீர்வுகளை அளித்தல்.
நகரத்திற்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்
சென்னை: இந்தியாவில் முதல் கட்டமாக அமைக்கப்பட உள்ள 20 ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலை மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு இன்று வெளியிட்டார். 20 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் 5 தலைநகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. சென்னை, கோவை, புவனேஸ்வர், புனே, ஜெய்பூர், சூரத், கொச்சி, அகமதாபாத், ஜபல்பூர்,விசாகப்பட்டினம், சோலாப்பூர், தாவனகரே, இந்தூர், டெல்லி, காக்கிநாடா, பெலகாவி, உதய்பூர், குவஹாத்தி, லூதியானா, போபால் ஆகிய 20 நகரங்களில் முதல்கட்டமாக ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்பட உள்ளன. Smart Cities: First 20 To Be Announced Today நாட்டில் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி முதற்கட்டமாக 20 நகரங்கள் பட்டியலை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
அறிவிப்பினை வெளியிட்டு பேசிய வெங்கையா நாயுடு, 1.52 கோடி பேர் இந்த ஸ்மார்ட்சிட்டி தேர்வில் ஈடுபட்டனர். நகரங்களுக்கு இடையேயான போட்டியின் அடிப்படையிலேயே ஸ்மார்ட் சிட்டிகள் தேர்வு செய்யப்பட்டன. ஸ்மார்ட்சிட்டி தொடர்பான எந்த முடிவும் டெல்லியில் எடுக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 20 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் 5 தலைநகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, ஓடிஸா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், மகராஷ்ரா மாநிலத்தில் உள்ள புனே, சோலாப்பூர், மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர்,போபால், ஜெபல்பூர், ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூர், உதய்பூர் நகரங்களும் ஸ்மார்ட் சிட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, குஜராத்தில் உள்ள சூரத், அகமதாபாத் நகரங்களும், கேரளாவில் உள்ள கொச்சி, ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டிணம், காக்கிநாடா நகரங்களும், கர்நாடகாவில் உள்ள தாவனகரே, பெலகாவி, (பெல்காம்), அஸ்ஸாமில் உள்ள குவஹாத்தி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா ஆகிய 20 நகரங்களில் முதல்கட்டமாக ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்நகரங்களில் பணிகள் முடிவடையும் என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்களில்
மின்சாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து, இணைய வசதி, இ-நிர்வாகம்
மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு மூலம் சிறப்பான அடிப்படைக் கட்டமைப்புகள்
மேம்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஸ்மார்ட்
சிட்டிகளாக்கப்பட உள்ள 98 நகரங்களின் பட்டியல் கடந்த ஆண்டு
வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 24 மாநிலங்களின் தலைநகரங்களும்
இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திலும் அதற்கு
அடுத்தபடியாக தமிழ்நாட்டிலும் நகரங்கள் இந்தப் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து 13 நகரங்களும்,
தமிழ்நாட்டில் இருந்து 12 நகரங்களும், மகாராஷ்டிராவில் இருந்து 10
நகரங்களும், மத்திய பிரதேசத்தில் இருந்து 7 நகரங்களும், பீகார் மற்றும்
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தலா 3 நகரங்களும் இந்தப் பட்டியலில்
இணைக்கப்பட்டுள்ளன.
://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக