செவ்வாய், 29 டிசம்பர், 2015

தேமுதிகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல்


டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க கோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே தேமுதிக சார்பில் திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிரே உள்ள நிழற்குடையில் இருந்த தனது பேனர் கீழே இறங்கி ஜெ. படம் தெரிகிறது. அதைப் பார்த்தால் கோபம் வருகிறது என்று சொல்ல... அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் ஜெ. படத்தை அற்ற முயன்றபோது படம் கீழே விழுந்து உடைந்தது.
அதன் பிறகு விஜயகாந்த் சென்று விட்டார். ஜெ. படம் உடைந்த தகவல் அறிந்து திரண்டு வந்த அதிமுகவினர் சாலையோரம் வைக்கப் பட்டிருந்த விஜயகாந்த் பதாகைகள் கொடிகளை கிழித்து தியிட்டு கொளுத்தினர்.

இதையடுத்து, தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தை முடித்துகொண்டு வேனில் வீடு திரும்பிய தேமுதிக வினரை கும்பகோனத்தைச் சேர்ந்த அதிமுகவினர் ஓடஓட விரட்டித்தாக்கியுள்ளனர்.
கொல்லுமாங்குடியை சேர்ந்த தேமுதிக வினர் தஞ்சையிலிருந்து வீடுதிரும்பினர். சாப்பிடு வதற்காக கும்பகோனம் உச்சிப்பில்லையார் கோயில் அருகே வேனை நிருத்திவிட்டு இறங்கினர். இதைப்பார்த்த அதிமுக நகர நிர்வாகி ஒருவர் அனைவருக்கும் தகவல் கொடுத்த நிமிடமே 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேனை சுற்றி வளைத்து தாக்கத் துவங்கினர். இதைப் பார்த்த தேமுதிகவினர் தப்பித்தால் போதுமென தலைதெரிக்க ஆளுக்கொரு திசைக்கு ஓடினர்.  nakkheeran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக