வெள்ளி, 18 டிசம்பர், 2015

வெள்ளத்தில் சென்னை.....பீப் பாடலை வைத்து திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறதா?



சென்னை வெள்ளத்தையும் அதன் பாதிப்பையும், அந்த சமயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யத் தவறிய செயல்களையும் கிட்டத்தட்ட
மக்கள் மறந்து விட்டார்கள். இதைத்தான் சிலர் எதிர்பார்த்தனர்.. அதற்கேற்ப நகர்த்தப்பட்ட காய் நகர்த்தல்களும் செவ்வனே அரங்கேறி வருவதாகவும் தெரிகிறது. சென்னையை உலுக்கிய வெள்ளம் வடிந்த கையோடு தமிழகத்தில் புதுப் புதுப் பரபரப்புகளை கச்சை கட்டிக் கொண்டு கிளம்புகின்றன. இவையெல்லாம் திசை திருப்பல் நடவடிக்கைகளாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.
சென்னையை உலுக்கிய மிகப் பெரிய வெள்ளத்தின்போது மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் தமிழக அரசு சரிவர ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாகவே வைக்கப்பட்டுள்ளது. அதை விட செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் காட்டப்பட்ட மெத்தனமும் வெறும் பீப் சவுண்டு  பிரச்சனையில் மறக்ககூடிய விடயமா செம்பரபாக்கம்? யாரு கண்டா நமக்கு வாய்த்த அடிமைகள்தான் திறமைசாலிகள் ஆயிற்றே...
சர்ச்சையாகியுள்ளது.  
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையும் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். மக்களிடமும் கூட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு முழு்மையாக ஈடுபடவில்லையே என்ற வருத்தமும், வேதனையும் மேலோங்கியே உள்ளது. இந்த நிலையில்தான் திடீரென சிம்பு - அனிருத் விவகாரம் பலமாக வெடித்து வெளிக் கிளம்பியது. அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் செய்த அசிங்கத்தை அம்பலப்படுத்தி விட்டார் ஒருவர். அந்த அசிங்கத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் வெடித்துக் கிளம்பிய கருத்துக்கள், எதிர்க்கருத்துக்கள், பெண்கள் அமைப்பினரின் போராட்டங்கள், போலீஸ் புகார்கள் என ஒட்டுமொத்த தமிழகமும் அந்தப் பக்கம் அப்படியே திரும்பி விட்டது. இந்த அசிங்கப் பாட்டை இருவரும் எப்போதோ போட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திடீரென இப்போது இது ஏன் கசிந்தது என்றுதான் தெரியவில்லை. அடுத்து இந்த விவகாரத்தில் புதிதாக ஒரு பரபரப்புக்கு நேற்று பிள்ளையார் சுழி போட்டு விட்டனர். வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களைப் பாராட்டி சான்றிதழ், பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் பேச ஆரம்பித்தபோது திடீரென ஒரு செய்தியாளர் குறுக்கிட்டு பீப் சாங் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டபோது அத்தனை பேருக்குமே குழப்பம்தான். இளையராஜாவோ கோபமாகி விட்டார். வார்த்தையை விட்டு விட்டார். இந்த இடத்தில்தான் டோட்டல் அட்மாஸ்பியரே மாறிப் போனது. என்ன காரணத்திற்காக நேற்றையே நிகழ்ச்சி நடந்ததோ அது சுத்தமாக அடிபட்டுப் போய் விட்டது. இளையராஜா செய்தியாளரைத் திட்டி விட்டார் என்பதே தலைப்புச் செய்தியாகிப் போனது. நேற்றைய நிகழ்வு எப்படி இருக்கிறது என்றால்.. இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. அப்போது அந்த வழியாக அவர் பாட்டுக்குச் சென்ற ஒரு ஆளைப் பிடித்து, இவங்க சண்டை பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டு, அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்து இதை ஏய்யா என் கிட்ட கேக்குறே என்று கேட்டதை வைத்து நீ எப்படி இப்படிச் சொல்லலாம், அதெப்படி நீ கருத்து சொல்லாம போகலாம் என்று சண்டை பிடிப்பது போல உள்ளது. மொத்தத்தில் வெள்ளம் என்ற வார்த்தையே மக்கள் மனதிலிருந்து அகல வேண்டும் என்ற திட்டத்துடன் யாரோ செயல்படுவது போலத்தான் தெரிகிறது. எதற்கும் விஜயகாந்த் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது.. அடுத்து அவரை டார்கெட் செய்தாலும் செய்யலாம்!

Read more at://tamil.oneindia.com/nl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக