வெள்ளி, 18 டிசம்பர், 2015

குற்றவாளி வெற்றி பெற்றுவிட்டான்..மாணவியின் தாயார் குமுறல்..டெல்லி பலாத்கார வழக்கில்

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டனை அனுபவித்த இளம் குற்றவாளியை விடுவிப்பதற்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. டெல்லி மகளிர் அமைப்பு, ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்ய உள்ளது. ஜனாதிபதியிடமும் குற்றவாளி சிறுவன் விடுதலை விவகாரத்தை மீண்டும் எழுப்ப உள்ளது. சிறுவனை விடுதலை செய்வதற்கு ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்தது தொடர்பாக பேசிய மாணவியின் தாயார் ஆஷா தேவி, அனைத்து போராட்டங்களை அடுத்தும், குற்றவாளி சிறுவன் விடுதலை செய்யப்பட உள்ளான் என்று கூறினார்.
“குற்றவாளி வெற்றி பெற்றுவிட்டான் என்றும் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். நான் கடந்த மூன்று வருடங்களாக நீதிக்காக போராடினேன். ஆனால், நீதிமன்றமும் அரசாங்கமும் குற்றவாளியை விடுதலை செய்துவிட்டது. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது, ஆனால் நீதி கிடைக்கவில்லை. எங்களின் மூன்று வருட போராட்டம் வீணாகிவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.
maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக