புதன், 16 டிசம்பர், 2015

எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து ரூ.2.5 கோடி நன்கொடை பெற்ற பா.ஜனதா!

ருமை மாட்டிறைச்சி வியாபாரிகளிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சி 2.5 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2013-14, 2014- 15 ம் ஆண்டுகளில் இந்த நன்கொடையை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2014-ம் ஆண்டு பொது தேர்தலின் போது, பிரிகிரோபிகோ அல்லானா, பிரிகிரோபிகோ  கன்வென்ரா அல்லானா, இன்டக்ரோ புட்ஸ் நிறுவனங்களிடம் இருந்து 2 கோடி ரூபாயை நன்கொடையாக பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது.


இந்த 3 நிறுவனங்களும் மும்பை கொலாபாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அல்லானா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து எருமை மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு  அதிகமாக ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனம் ஆகும். அதோடு 2015-ம் ஆண்டு பிரிகிரோபிகோ அல்லானா நிறுவனம் தனியாக பாரதிய ஜனதா கட்சிக்கு 50 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக