புதன், 4 நவம்பர், 2015

கலைஞர் : ஸ்டாலின்தான் திமுகவின் அடுத்த தலைவர்...

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை நடத்தி வருகிறார். அந்த பயணத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொது மக்களின் துயரங்களையும், கோரிக்கைகளையும் ஸ்டாலின் என்னிடம் தொடர்பு கொண்டு தினமும் தெரிவிப்பார். தமிழக மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளதையும், ஒரு மாற்றம் அடைந்துள்ளதையும் விவரித்தார். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளதாக தெரவித்தார். திமுகவில் எனக்கு அடுத்து தலைமை பொறுப்புக்கு யார் வருவார்கள் என ஒரு விவாதம் நடைபெறுவது உண்டு. ஆனால், திமுக ஒரு ஜனநாயக இயக்கமாகும். இங்கு பெரும்பாலானவர்களின் கருத்து முடிவே இறுதியானது.     இதை சொன்னதால் தானே  குஷ்புவுக்கு உங்க மகளிர் அணி செருப்புக்களை..கற்களை  வீசியது  ஆபாசமாக விமர்சித்தது  ஆட்டமோ ஆட்டம் என்று ஆட்டம் காட்டியது ? அவரும் ஆளை விட்டா சாமி போதும்னு ஓடிட்டார் ...இப்ப வேற பொதுக்குழு ஜனநாயகம்னு.....
நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அறிவிக்கவும் முடியாது. ஆனால், திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த பதவிக்கு தகுதியான நபர் அவர் ஒருவரே. இதை திமுகவினரும், மக்களும் விரும்புவதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என தற்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் மூடிசூட்டப்பட்டுள்ளது. திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினை ஏற்றுக் கொள்ள முடியாது என கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக