திங்கள், 9 நவம்பர், 2015

பீகார் எதிரொலி...மாயாவதி கட்சி தேசிய அந்தஸ்தை இழக்கிறது..தேர்தல் கமிஷன்...

1984–ல் தேசிய அந்தஸ்து பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செல்வாக்கு 2012–ம் ஆண்டுக்கு பிறகு சரியத்தொடங்கியது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சி மிகவும் குறைந்த சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. இதைத்தொடர்ந்து உங்கள் கட்சியின் தேசிய அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று விளக்கம் கேட்டு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியது. அதன்பின் நடந்த மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களிலும் அக்கட்சிக்கு குறிப்பிடத்தக்க ஓட்டு சதவீதமோ, வெற்றியோ கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அண்மையில் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 சதவீத ஓட்டு மட்டுமே கிடைத்தது. உத்தரபிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் தேசிய அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு குறிப்பிட்ட அளவில் ஓட்டு சதவீதமோ அல்லது அதற்கேற்ப தொகுதிகள் வெற்றியோ கிடைக்கவில்லை. இதனால் அந்த கட்சி தேசிய அந்தஸ்தை இழக்கும் என்று தெரிகிறது.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக