திங்கள், 9 நவம்பர், 2015

(ஏழ்மையில் வாடும்) சச்சின் உள்ளிட்ட 11 மாஜி வீரர்களுக்கு தலா ரூ.1.5 கோடி பரிசு தொகை

Tendulkar, Dravid, Ganguly and 8 others to receive Rs 1.5 crore each from BCCIமும்பை: சச்சின், கங்குலி, டிராவிட், ரவிசாஸ்திரி, கவாஸ்கர் உள்ளிட்ட , 100 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேல் ஆடிய அனுபவமுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு தலா ரூ.1.50 கோடியை ஒரே நேர செட்டில்மென்ட்டாக அளிக்கிறதாம்.
பிசிசிஐ இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவல்: சச்சின் டெண்டுல்கர், டிராவிட், கங்குலி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, திலிப் வெங்சர்கார், சையது கிர்மானி, வெங்கட்ராகவன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகிய 11 வீரர்களுக்கு தலா ரூ.1.5 கோடி பணம் ஒரு டைம் செட்டில்மென்ட்டாக தரப்பட்டுள்ளது.


இவர்கள், இந்தியாவுக்காக, 100 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேல் ஆடியவர்கள் என்பதால் இந்த தொகை தரப்பட்டுள்ளது. 75 முதல் 100 போட்டிகள் வரை ஆடிய 13 வீரர்களுக்கு, ரூ.75 லட்சம் பரிசு தரப்படுகிறது.
25 முதல் 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ரூ.27 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. 10 முதல் 24 டெஸ்ட் போட்டிகள் ஆடிய 37 பேருக்கு ரூ.50 லட்சமும், ஒரு டெஸ்ட் முதல் 9 டெஸ்ட் வரையில் ஆடியவர்களுக்கு ரூ.35 லட்சமும் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக