சனி, 28 நவம்பர், 2015

மழைக்கும் கமிசனுக்கும் அஞ்சி ஓடிய முதலீட்டாளர்கள்

சென்னை மழைக்கு அஞ்சி, தொழில் முதலீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை, முதலீட்டாளர்கள் தவிர்த்து வரும் தகவல் வந்துள்ளது. ;இதுகுறித்து, தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது:சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பின், தொழில் முதலீட்டாளர்களுடன், ஆலோசனைக் கூட்டங்கள் வரிசையாக நடந்தன. அதன் காரணமாக, சில ஆலைகளில் செயல்பாடும் துவங்கியது. ஆனால், கடந்த இரு வாரமாக, இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, சென்னையில் பெய்து வரும் தொடர் மழையே காரணம். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பல கூட்டங்கள், மழை காரணமாக முதலீட்டாளர்கள் வராததால், ஒத்திவைக்க நேர்ந்தது. கடந்த வாரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய, முதலீட்டாளர் ஒருவர், தான் போக வேண்டிய விமானத்தை தவறவிட்டார்.  2.42 லட்சம் கோடி என்பதே கடைந்தெடுத்த புருடா ...ஒரு புருடாவை கூட அம்மையார் மனம் குளிரும் படி விட வேண்டும் என ...24ம் தேதி 2ம் மாதம் அம்மையார் பிறந்த தேதியை கொண்டு....2.42 என சொல்லி மக்களை முட்டாளாக்கி உள்ளனர்...எவன் வருவான்... இருப்பவன் ஓடாமல் இருக்க வேண்டும்.......
விமான நிலையத்தில் இருந்து, மீண்டும் நகருக்கு திரும்ப நினைத்த அவரால், அங்கிருந்து நகர முடியவில்லை. அதற்குள், அவர் தவறவிட்ட விமானம், ஊர் போய் மீண்டும் சென்னை திரும்பி விட்டது.

மற்றொரு முதலீட்டாளர், தி.நகரில் போக்குவரத்தில் சிக்கியபோது, காரை டிரைவரிடம் கொடுத்து விட்டு, அருகில் உள்ள சர்வீஸ் அபார்ட்மென்ட்டில், இரவை கழிக்க நேர்ந்தது. இதுபோன்ற அனுபவங்களால், முதலீட்டாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். மழை நின்ற பின்னே, முதலீடு தொடர்பான பணிகள் சூடுபிடிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக