ஞாயிறு, 29 நவம்பர், 2015

மோடியின் தொகுதியில் கோக்க கோலா நிறுவனத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு..வாரணாசியில் ..


பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியில் கோக்க கோலா நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கோக கோலா நிறுவனம் கோக்க கோலா நிறுவனம் நிலத்தடி நீரை மிக அதிகமாக ஊறிஞ்சி எடுத்து குளிர்பானம் தயாரித்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் கோக்க கோலா நிறுவனம் நிலத்தடி நீரை ஊறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் இங்குள்ள 18 கிராம மக்கள் நிலத்தடி நீர் கிடைக்காமல் பெரும் அவதிப்படுகிறார்கள். விவசாயிகளின் கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டதால் நீர் இல்லாமல் விவசாயிகள் சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இதையடுத்து கோக்க கோலா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று இங்குள்ள விவசாயிகளும், பொது மக்களும், பஞ்சாயத்து தலைவர்களும் கோரி வருகிறார்கள். இது குறித்து பஞ்சாயத்து கவுன்சிலர் அமித் ஸ்ரீவத்சவா கூறுகையில், ”கோக கோலா நிறுவனத்தை இங்கு அமைக்க வேணடும் என்று நாங்கள் ஒரு போதும் கோரவில்லை. அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக அதற்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். கோக கோலா நிறுவனம் இங்கு அமைக்கப்பட்டதில் இருந்து நிலத்தடி நீரை 24 மணி நேரமும் உறிஞ்சி எடுத்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் குடிநீர் மற்றும் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். சுற்றுச்சுழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த 2011-ம்ஆண்டு மத்திய நிலத்தடி நீர்வளத்துறை இந்த கோக்க கோலா நிறுவனத்தால் நிலத்தடி நீர் கடுமையாக சுரண்டப்படுவதாக தெரிவித்திருந்தது. ஆனாலும் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டி உள்ளார். webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக