வெள்ளி, 27 நவம்பர், 2015

சிரியாவில் விமான தாக்குதலுக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் அனுமதி

பாரீஸ் நகரில் கடந்த 13-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். அதைத் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தனது வான்தாக்குதலை பிரான்ஸ் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், சிரியாவில் வான்தாக்குதலை நீட்டிப்பது தொடர்பாக பிரான்ஸ் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 515 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 4 ஓட்டுகள் மட்டுமே விழுந்தன. 10 எம்.பி.க்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.< இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ், “ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் மீண்டும் போர் தொடுத்துள்ளது. இதற்கு மாற்று இல்லை. நாம் அவர்களை அழித்தே தீர வேண்டும்” என குறிப்பிட்டார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக