செவ்வாய், 24 நவம்பர், 2015

சென்னை...துத்துக்குடி மீண்டும் தண்ணீரில் ..நான்கு மணிநேரத்தில்

சென்னையில் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து அடியோடு முடங்கியது.
 சென்னையில் கனமழை காரணமாக, எழும்பூர், சென்ரல், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, புரசைவாக்கம், சேட்பட், ராதாகிருஷ்ணன் சாலை, தி.நகர், வடபழனி,  கிண்டி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம் சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சென்னையின் முக்கிய பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து அடியோடு முடங்கியது.
 தாழ்வான பகுதிகளில் நான்கு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்துவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக