சனி, 28 நவம்பர், 2015

தந்தி டிவி விவாதங்களில் திமுக கலந்துகொள்ளாது...நடுநிலை என்ற பெயரில் அதிமுகவுக்கு தந்தி டிவி....

நடுநிலை என்ற பெயரில் அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி இனிமேல் தந்தி தொலைக்காட்சியில் நடைபெறும் விவாதங்களில், திமுகவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஆளுங்கட்சியாக இருந்த போதும், எதிர்கட்சியாக இருக்கும் போதும் ஆளும் அதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்து வருவது ஒரு சில ஊடகத் துறையினர் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது “நடுநிலை” என்ற பெயரை சூட்டிக் கொண்டுள்ள “தந்தி தொலைக்காட்சி ”, ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாகவும் - தி.மு.கழகத்திற்கு எதிராகவும் தொடர்ந்து, திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.
குறிப்பாக, பல்வேறு “விவாதங்கள்” என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்களை வைத்துக் கொண்டு, உண்மைக்கு மாறாக, திமுக தரப்பில் பதில் அளிக்க உரிய வாய்ப்பு அளிக்காமல், ஆளும் அதிமுக-வுக்கு பிரச்சாரம் செய்து வருவதால், திமுக தந்தி தொலைக்காட்சியில் நடைபெறும் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக