செவ்வாய், 24 நவம்பர், 2015

இந்தியர்களை இழிவாக நடத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள்...போர்த்திறன் இல்லாதவர்கள்’’

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பிரசாரத்தால் கவரப்பட்டு, இந்திய இளைஞர்கள் சிலர் அதில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் இழிவாக நடத்தி வருவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த அறிக்கை, இந்திய புலனாய்வு அமைப்பிடமும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஐ.எஸ். இயக்கத்தில் 23 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் 6 பேர் பல்வேறு சண்டைகளில் கொல்லப்பட்டு விட்டனர். இதற்கு காரணம், இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம், சூடான், நைஜீரியா போன்ற தெற்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் இளைஞர்கள், போர்த்திறன் இல்லாதவர்கள் என்று கருதி, அவர்களை மனித கேடயங்களாக ஐ.எஸ். இயக்கம் பயன்படுத்துவதுதான். அந்த இயக்கத்தில், அரபு நாட்டைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் உள்ளது. அவர்கள்தான் ஐ.எஸ். இயக்கத்தின் போலீஸ் படையில் சேர முடியும். அவர்களுக்குத்தான் அதிக சம்பளம், நவீன ஆயுத வசதி மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் இளைஞர்களை ஒரு சிறிய பாசறையில் மொத்தமாக அடைத்து வைக்கிறார்கள்.


அவர்களுக்கு குறைவான சம்பளமும், தரம் குறைந்த ஆயுதங்களும் வழங்கப்படுகின்றன. அவர்களை ஐ.எஸ். போலீஸ் கண்காணித்தபடியே இருக்கிறது. தெற்கு ஆசிய நாடுகளின் இளைஞர்களை பெரும்பாலும் மனித வெடிகுண்டுகளாகவே அனுப்புகிறார்கள். அவர்களுக்கே தெரியாமல், வெடிகுண்டுகளை இயக்கி வெடிக்கச் செய்து விடுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக