ஞாயிறு, 29 நவம்பர், 2015

விஜயதரணி இளங்கோவன் மோதல்...தமிழகத்தில் காங்கிரஸ் சத்தம்தான் தற்போது ஹிட்....

சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியின் ஆதரவாளர்களின் சேலையை பிடித்து இழுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் ஜாதியை சொல்லி திட்டியதாக விஜயதாரணி உள்ளிட்டோ மீது இளங்கோவன் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இருதரப்பும் இப்படி கேவலமான புகார்களை தெரிவித்து போலீஸுக்கு போயிருப்பதால் எஞ்சிய காங்கிரஸின் மானமும் கப்பலேறுவதாக அக்கட்சி தொண்டர்கள் புலம்புகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கோஷ்டி சண்டைகள் அகிலம் அறிந்த உண்மை.. இந்த சண்டையில் கிழியாத வேஷ்டிகளே இல்லை.. இதனையும் நாடறியும். இப்போது ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்கிற வகையில் நீங்க மட்டும் கோஷ்டி சண்டையில் இறங்க முடியுமா? உங்களைவிட கேவலமாக எங்களாலும் காங்கிரஸ் கட்சியை நாறடித்துவிட முடியும் என வரிந்து கட்டி களமாடி வருகின்றனர் விஜயதாரணி எம்.எல்.ஏ. தலைமையிலான கோஷ்டியும், இளங்கோவன் ஆதரவு மகளிர் கோஷ்டியும்...
போஸ்டரால் பஞ்சாயத்து சத்தியமூர்த்தி பவனில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டரில் விஜயதாரணி படம் பெரிதாகவும் இளங்கோவன் படம் சிறிதாகவும் இடம்பெற்றிருந்தது. இதைப் பார்த்து கொந்தளித்த இளங்கோவன் கோஷ்டி அந்த போஸ்டர்களை கிழித்து கழிவறையில் தூக்கிப் போட்டது. இதுதான் பிரச்சனை.
இந்த விவகாரம் குறித்து இளங்கோவனிடம் விஜயதாரணி நேரில் முறையிட்டிருக்கிறார்.. இதற்கு இளங்கோவன் தன்னுடைய பாணியில் அளித்த பதில் களேபரத்துக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த விவகாரத்தை கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்கும் முன்னரே இரு கோஷ்டிகளும் போலீசுக்குப் போய்விட்டது
சேலையை பிடிச்சு இழுத்தாங்க.. விஜயதாரணி கோஷ்டியைச் சேர்ந்த தமிழக மகளிர் காங்கிரஸ் துணை தலைவர்களான சாந்தாஸ்ரீநி, மானசா ஆகியோர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், பேனர் கிழிக்கப்பட்ட பஞ்சாயத்தில் விஜயதாரணியை இளங்கோவன் தரக்குறைவாக பேசினார்; நான்தான் பேனரை கிழிக்க சொன்னேன் என்று சத்தம் போட்டார்.... அப்போது இளங்கோவனின் ஆதரவாளர்களான திரவியம், பொன்பாண்டியன், பிராங்ளின் பிரகாஷ் ஆகியோரும் சாந்தாஸ்ரீநியாக என் நெஞ்சிலும், தோளிலும் கை வைத்து பிடித்து வெளியில் தள்ளினர்... பிராங்ளின் மிக மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி மானசாவின் புடவையை பிடித்து இழுத்தார் என புகார் கொடுத்தனர்.
பெண் வன்கொடுமை சட்டம் இதனால் இளங்கோவன் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more at: /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக