வெள்ளி, 27 நவம்பர், 2015

கேரளா 55 கோடி செலவில் ஆடம்பர திருமணம்...தொழில் அதிபரின் சமுக சேவை?

கொல்லம் : பிரபல தொழில் அதிபர் ரவி பிள்ளை, 55 கோடி ரூபாய் செலவில், தன் மகள் டாக்டர் ஆர்த்தி -
டாக்டர் ஆதித்ய விஷ்ணு திருமணத்தை நடத்தினார். கேரளாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர், ரவி பிள்ளை. கேரளாவின், 'நம்பர் 1' பணக்காரர்
என்ற பெருமையை உடைய இவர், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துக்களுக்கு சொந்தக்காரர். உலகில் உள்ள டாப் 1000 பணக்காரர்களில் இவரும் ஒருவர்.
 பிரம்மாண்டமாக..; வளைகுடா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் கனிமம், கட்டுமானம், கல்வி நிறுவனங்கள் என, ஏராளமான தொழில்களை நடத்தி வருகிறார். இவருக்கு, உலகின் பல நாடுகளில் 26க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன; அவற்றில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். ரவி பிள்ளை, தன் மகள் திருமணத்தை, நாடே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டமாக நேற்று நடத்தினார். இத்திருமணம், கேரளாவின் கொல்லம் நகரில் புகழ் பெற்ற ஆஸ்ரமம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக, 8 ஏக்கரில், 3.50 லட்சம் சதுர அடி பரப்பில், 40,000 சதுரடி பரப்பளவிற்கு ஏசி வசதி செய்யப்பட்டிருந்தது. ராஜஸ்தான் கோட்டை மற்றும் அரண்மனை போன்ற பிரம்மாண்டமான, 'செட்' அமைக்கப்பட்டிருந்தது.  இவர் கேரளாவில் சீட்டுகம்பனி நடத்தி  அப்படியே கஷ்டப்பட்டு பலதொழிகளும் செய்து விடா முயற்சியால்....இப்படித்தாய்ன் எல்லா பணக்காரங்க வரலாறும்
இதற்காக, 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 'செட்'களை, பாகுபலி படத்தின் கலை இயக்குனர் சாபு சிரில் வடிவமைத்திருந்தார். ஏராளமான தொழிலாளர்கள், மூன்று மாதங்களாக இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து, சாபுசிரில் கூறியதாவது:மும்பையில், இந்த செட்டின் பல பாகங்கள் களிமண்ணாலான வார்படமாக முதலில் உருவாக்கப்பட்டன. அதன்பின், 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' மூலம் பாகங்கள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இதற்கே, 75 நாட்களுக்கு மேலானது. இவ்வாறு அவர் கூறினார்.
திருமணத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மிக பிரம்மாண்ட பந்தலில், 30 ஆயிரத்திற்கும் அதிகமான விருந்தினர்கள் அமருவதற்கான வசதி செய்யப்பட்டிருந்தது. மணமேடை, இதழ் விரிந்த தாமரை வடிவத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்தது.
பாடகி காயத்ரியின் பக்தி இசைக் கச்சேரியும், மஞ்சு வாரியர், ஷோபனா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஸ்டீபன் தேவசியின் மேற்கத்திய இசை கச்சேரியும் களை கட்டியது. மண விழாவில், சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் அரச குடும்பத்தினர், 42 நாடுகளின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், மாநில முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். ஹாலிவுட் நடிகர்கள் இந்த மண விழாவுக்காக, பஹ்ரைன் மன்னர் குடும்பத்தினர் தனி விமானத்தில் வந்திருந்தனர். இவர்களை தவிர மம்முட்டி, மோகன் லால் உள்ளிட்ட கேரள நடிகர், நடிகையரும், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் திரைக் கலைஞர்களும் பங்கேற்றனர்.
பாதுகாப்பு பணியில், கேரளா போலீசார், 250 பேருடன், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த, 350 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர். திருமண விருந்தில், வெளிநாடு, உள்நாட்டு உணவு வகைகள் பரிமாறப்பட்டன. திருமணத்தையொட்டி, ரவி பிள்ளை, தொண்டு நிறுவனங்களுக்கு, சமூக நல சேவைகளுக்காக, 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக