திங்கள், 12 அக்டோபர், 2015

மனோரமாவின் கடைசி உரை - வீடியோ



மறைந்த ஆச்சி மனோரமா கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி இம்மாதம் 7ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சினிமா செய்தியாளர் சங்க விருது வழங்கும் விழா. கமல்ஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் மனோரமா, உணர்ச்சிகரமாகப் பேசினார். தமது உயிர் அந்த மேடையிலேயே பிரிந்தாலும் சந்தோஷப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். கூட்டத்தில், கருணாநிதியால் 1945ம் ஆண்டு அதாவது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உரைநடை வடிவிலான கவிதையான 'குடிசைதான் ஒருபுறத்தில்' எனத் தொடங்கும் கவிதையினை ஆச்சி மனோரமா உணர்ச்சிகரமாக பேசினார். webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக