திங்கள், 12 அக்டோபர், 2015

கலைஞரும் குஷ்புவும் மேடையில்....வைரமுத்துவின் விழாவில்...

கடந்த ஆண்டு ஜூன் மாதம்_திமுகவில்  இருந்து விலகிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு ஓராண்டுக்கு பிறகு விழா ஒன்றில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா, சின்னத்திரை என வெற்றிகரமாக வலம் வந்த நடிகை குஷ்பு 2010 ஆம் ஆண்டு திடீரென திமுகவில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். திமுகவில் சேர்ந்த சில நாட்களிலேயே கட்சியில் பிரபலமான குஷ்பு அக்கட்சியின் முன்னனி நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். 2011 மற்றும் 2014 ஆண்டு சட்டசபை மற்றும் பாரளுமன்ற தேர்தலில் திமுகவுக்காக தமிழக முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு திமுக தலைவர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றார். கருணாநிதியை எந்த நேரத்திலும் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்த குஷ்பு திமுக வின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு தனது சுதந்திரமான கருத்தை வெளியிட்டதில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கலைஞர்  குஷ்புவுக்காக தென்சென்னை சீட் கேட்டு...  ஸ்டாலினோடு சண்டை போட்டும்.....கெடுகுடி சொற்கேளாது.....
இதனால் ஆத்திரமடைந்த கட்சியின் சில அமைப்பினர் குஷ்பு மீது செருப்பு வீசி தக்குதல் நடத்தினர் மேலும் குஷ்புவின் வீட்டையும் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.

பின்னர் படிப்படியாக கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட குஷ்பு கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் திடீரென திமுக வில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

சிறுது காலம் அரசியலில் இருந்து விலகி இருந்த குஷ்பு காங்கிரஸ் துனைத்தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக வலம் வரும் குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ளார்.

திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு அதன் பின்பு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவே இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்று அவர் கூறியிருந்தார்.

வைரமுத்து எழுதிய சிறுகதைகள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கருணாநிதியை குஷ்பு சந்தித்து பேசி அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.

கருணாநிதியின் உடல் நலம் குறித்து குஷ்பு அக்கறையுடன் கேட்டறிந்தார், இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். திமுகவில் இருந்து விலகி ஓராண்டுகளுக்கு மேல் கருணாநிதியை சந்திக்காமல் இருந்த குஷ்பு தற்போது இந்த விழாவில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மீண்டும் வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக