ஞாயிறு, 11 அக்டோபர், 2015

சென்னையில் பரிதவிக்கும் மு.க,முத்து!

திமுக கலைஞரின் மூத்த மகனும் நடிகரும் பாடகருமான மு.க.முத்து சமீபகாலமாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். திருவாரூரில் வசித்து வந்த இவர், கடந்த மாதம் தஞ்சையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதன் பிறகும் பிரச்சினை இருந்ததால், அவரது மனைவி சிவகாமசுந்தரி அவரை சென்னை அப்பல்லோ மருத்து வமனையில் சமீபத்தில் அட்மிட் செய்தார். அவருக்கு டாக்டர் ராஜ் பி. சிங் தீவிர சிகிச்சை யளித்தார். அப்பல்லோவில் இருந்த முத்துவை கலைஞர் குடும்பத்தினர் எவரும் கண்டுகொள்ளவில்லை. அதிக அன்புகாட்டி வந்த மு.க.அழகிரி கூட கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
அப்பல் லோவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முத்துவை, ’இந்த நிலையில் ஊருக்குப் போகவேண்டாம். சென்னையில் இருந்தே சிகிச்சை பெறுங்கள்’ என டாக்டர்கள் அறிவுறுத்தினர். கோபாலபுரத்தில் எல்லோரும் கைவிட்ட நிலையில், எங்கே தங்குவது என பரிதவித்த மு.க. முத்துவை, அவரது நண்பர் ஒருவர் தனது அடையாறு இல்லத்தில் தற்காலிகமாகத் தங்க வைத்திருக்கிறார். முத்துவின் சகோதரர்களும் வாரிசுகளும் படாடோபமாக வாழ்ந்துவரும் நிலையில். கையறுநிலையில் பரிதவித்து வருகிறார் மு.க.முத்து. nakkheeranin.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக