செவ்வாய், 29 செப்டம்பர், 2015

மிருகங்களை பலியிடுவதை தடை செய்ய கோரி மனு: விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு

மிருகங்கள் பலியிடுவதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்கள் மன்றம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வி.ராதாகிருஷ்ணன் என்பவர் மதரீதியான பண்டிகைகளில் மிருகங்களை பலியிடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது என்று வரையறுக்கும் மிருகவதை தடை சட்டத்தின் பிரிவு 28-ஐ நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, மிருகவதை தடை சட்டத்திலேயே மதரீதியான காரணங்களுக்காக மிருகங்கள் பலியிடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக மக்களால் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியமான விஷயங்களுக்கு எதிராக கோர்ட்டு செயல்பட முடியாது. இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்து வகையான நம்பிக்கைகளுக்கும் இடையில் சமன்பாடு இருக்க வேண்டும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக