செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தொடர்ந்து தமிழ்படங்களை வாங்கும் லைக்கா நிறுவனம்!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மேலும் வணீக ரீதியாகவும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் ‘எந்திரன் 2’ படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் இந்நிறுவனம் படங்களை வாங்கி விநியோகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்தை விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ படத்தையும் லைக்கா நிறுவனம் வாங்கியது.
தற்போது இந்நிறுவனம் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தையும் கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில் சசிகுமார் நாயகனாகவும், வரலட்சுமி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைப்பது 1000மாவது படமாகும்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக