செவ்வாய், 15 செப்டம்பர், 2015

இந்திராணியை சிறையில் சந்தித்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள்!

சட்ட விரோதமாக இந்திரானியால் பிரிட்டிஷ் பிரஜா உரிமையும் வைத்துகொள்ள முடித்துள்ளது.இது பெரும் சந்தேகத்திற்கு இடமான விடயமாகும் . இவர் பிரித்தானிய உளவாளியாக இருக்க கூடிய சாத்தியம் உள்ளது, இவரால் எப்படி இந்திய அரசுக்கு தெரியாமல் இப்படி ஒரு மோசடி செய்ய முடிந்தது? இந்திய அரசு இன்னும் இரட்டை பிரஜா உரிமையை அங்கீரிக்க வில்லையே? இவருக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? இந்த ரகசியம் கூட கொலைக்கு காரணமாக இருக்கலாம்?  சோனியா காந்திகூட இத்தாலிய குடியுரிமையை ரத்து செய்துவிட்டார்.  மும்பையில் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியை, இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் சிறையில் சென்று சந்தித்துள்ளனர்.
நீதிமன்றக் காவலில் உள்ள இந்திராணி முகர்ஜிக்கு உதவி ஏதேனும் தேவையா, சிறையில் வசதிகள் இருக்கின்றனவா என்பது குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 3 வாரங்களாக காவல்துறை காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்த மும்பை காவல்துறையினருக்கு,  இந்தியன் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ள இந்திராணியிடம் இங்கிலாந்து பாஸ்போர்ட் இருப்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில், இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் நேற்று சிறைக்கு வந்து தங்கள் நாட்டு குடியுரிமை பெற்ற இந்திராணியை சந்தித்து உதவி கோரிய போதுதான், மும்பை காவல்துறைக்கே இந்த தகவல் தெரிய வந்துள்ளது dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக