சனி, 19 செப்டம்பர், 2015

விஷ்ணுபிரியா டிஸ்பி தற்கொலைக்கு அதிகாரியே காரணம்! தோழி மகேஸ்வரி டிஎஸ்பி கண்ணீர்...

தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி.விஷ்ணு  பிரியாவின் தோழியான  மகேஸ்வரி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சப்-டிவிசனில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். இவர் தோழி இறந்த துக்கம் தாங்காமல் சேலம் வந்தார். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:- நானும், விஷ்ணு பிரியாவும் சிவகங்கையில் டி.எஸ்.பி.யாக பயிற்சி பெற்றபோது நாங்கள் இருவரும் தோழிகளாக இருந்து வந்தோம். நேற்று மதியம் 2.48 மணியளவில் எனக்கு விநாயர் சதுர்த்தி பணி என்று செல்போனில் விஷ்ணு பிரியா பேசினார். அப்போது விநாயகர் சிலை பாதுகாப்புக்கு சென்று விட்டு இப்பதான் வந்தேன் என்று கூறி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு லைனில் வருவதாக கூறி, அப்புறம் என்னிடம் பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
நேற்று மாலை விஷ்ணு பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு செய்தி வந்தது. உடனே மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். அவருடைய தற்கொலைக்கு டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. போன்ற அதிகாரிகளின் நெருக்கடியே காரணம்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு எனக்கு திருப்தி அளிக்க வில்லை. உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் மற்றவர்களை கைது செய்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் எஸ்.பி. நிர்ப்பந்தம் செய்து வந்ததாக என்னிடம் கூறி வந்தார். நேர்மையான அதிகாரிகளுக்கு இது போன்ற நெருக்கடிகள் வருகிறது. இது குறித்து உங்களிடம் சொல்லும் போது என்னுடைய வேலை கூட போகலாம். அது பற்றி நான் கவலைப்படவில்லை.
விஷ்ணுபிரியா சாவின் மர்மம் குறித்து உண்மை தெரிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார் மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக