புதன், 26 ஆகஸ்ட், 2015

பாடகி சித்ரா: கேரளா பாடகர்களுக்கு மற்ற மாநிலங்களில் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை! You too Chithra?

பல ஆயிரக்கணக்கான தமிழ் பாடல்களை பாடும் வாய்ப்பு கிடைத்த சித்ரா இப்படி கூறுகிறார். இவர் இளையராஜாவை பந்தம் பிடித்து பல தமிழ் பாடகிகள் பலருக்கும் கிடைக்காத வரம் எல்லாம் பெற்றவர்! வேறொன்னும் இல்லை எல்லாம் இளையராஜா செஞ்ச சதி!  மலையாளத் திரையுலகத்தில் ஸ்ரேயா கோஷலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று பாடகி சித்ரா பேசியதாக நேற்று இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் நீண்டகாலமாகப் பாடிவரும் சித்ரா இப்படிப் பேசலாமா என்று பலர் அதிருப்தியுடன் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.
உண்மையில் சித்ரா இதுபற்றி என்ன பேசினார்?
கேரள சுற்றுலாத்துறை சார்பாக திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் சித்ரா கலந்துகொண்டார். அவரிடம் மலையாளத் திரையுலகில் மற்ற மொழிப் பாடகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சித்ரா, ஸ்ரேயா கோஷல் போன்ற திறமையான பாடகிக்கு மலையாளப் படங்களில் வாய்ப்பு கொடுத்தால் யாரும் புகார் சொல்லமாட்டார்கள். அதேசமயம், கேரளாவில் உள்ள திறமையான பாடகர்களுக்கும் சம அளவில் வாய்ப்பளிக்கவேண்டும். உண்மையில் கேரளாவில் மற்ற மொழிப் பாடகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு போல, கேரளப் பாடகர்களுக்கு மற்ற மாநிலங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றார்.  dinamani.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக