செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மஹிந்தா ராஜபக்சே:தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் ! உத்தேசமாக UNP 101- UPFA 97 - TNA 17 தொகுதிகளில் வெற்றி .....

11 மாவட்டங்களில் ரணில்கட்சி வெற்றி!  9மாவட்டங்களில்  மகிந்தா கட்சி வெற்றி!
4 மாவட்டங்களில் தமிழர் தேசியகூட்டணி வெற்றி!  அறுதிபெரும்பான்மை  இரு  பெரும் கட்சிகளுக்கும்  கிடைக்க வில்லை! தமிழ் தேசிய கூட்டணியின்  உதவியுடன் தான் ஆட்சி அமைக்க முடியும்!
15ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.கூ அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. "பிரதமராக வருவது என்ற என்னுடைய கனவு இல்லாமற் போயுள்ளது. நான் ஏற்றுக் கொள்கிறேன். சிறப்பான போட்டியொன்றில் நாம் தோல்வியடைந்துள்ளோம்" என அவர் தெரிவித்ததாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. ஐ.ம.சு.கூ ஆட்சியமைக்காத போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினராக அவர் தொடர்ந்தும் கடமையாற்றுவார் எனவும் அவர் அறிவித்துள்ளார். tamil.dailymirror.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக