ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

NH 10 இது ஒரு இந்திப் படம்! இதுவரை இப்படி ஒரு படம் இந்தியாவில் வரவேயில்லை



இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கச் சொல்லி தோழர் சுகிதா தான்
சொன்னாங்க. (facebook.com/sugitha.sugi) அவுங்க சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று இரவு தான் பார்த்தேன். (13 August)
துணிந்து சொல்வேன்; இந்த நிமிடம் வரை இப்படி ஒரு படம் இந்தியாவில் வரவேயில்லை.
இப்படியும் சொல்வேன்; உண்மையான இந்தியாவைக் காட்டிய ஒரே படம்.
படத்தின் இயக்குநர் Navdeep Singh. இவரைப் பாராட்டுவதே அவருக்குச் செய்கிற அவமரியாதைதான். அவரைக் கட்டிப்பிடித்துக் கதறி அழத் தோன்றுகிறது.
‘அனுஷ்கா ஷர்மா’ – அழகான அல்லது கவர்ச்சியான நடிகை, வீராட் கோலியின் காதலி இப்படியாகத்தான் அறியப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் கவுரவங்களைக் கொலை செய்கிற அரக்கியாக அவதாரம் எடுத்து நிற்கிறார் இந்தப் படத்தில்.

அவரின் சிறப்பான நடிப்புக்காக மட்டுமல்ல, இப்படி ஒரு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார் என்பது அவர் மீதான மதிப்புக்குக் காரணம்.
நமது வீரம் பொருந்திய தமிழ் படக் கதாநாயகர்கள் அனுஷ்கா சர்மாவிடமிருந்து ஒரே ஒரு ‘சொட்டு’ தைரியத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டாலே…
கவுரக் கொலைகளை அம்பலப்படுதுவதோடு இந்தப் படத்தை முடித்து விடவில்லை இயக்குர் நவ்திப் சிங். அதற்குப் பிறகு அவர் அதை முடித்து வைக்கிற ‘கோபம்’ தான் அவர் வெறுமனே சினிமாக்காரர் அல்ல என்பதை அடையாளப்படுத்துகிறது.

‘கவுர’ கொலைகள் செய்கிறவர்களை அனுஷ்காசர்மா என்ன செய்கிறார் என்பதைப் பார்த்தால், அப்படிச் செய்கிற எதிரிகளை மட்டுமல்ல அவர்களுடன் கூட்டணி வைக்கத் துடிக்கிற துரோகிகளையும் இதுபோல் செய்யதால் தப்பில்லை என்ற உணர்வை இந்தப் படம் உங்களுக்குத்.தோற்று விக்கும்.
14 August at 09:21   mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக