ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

CBI அதிகாரிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கடிதம்! Debate on "Disproportionate Assets Case against A. Raja.


ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வை மறு விசாரணை நடத்த இயலாதென்பது தெரிந்தும் செயல்படுவது துன்புறுத்தலேயன்றி வேறல்ல!
சென்னை, ஆக.23_- ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வை மறு விசாரணை நடத்த இயலாதென்பது தெரிந்தும் செயல்படுவது துன்புறுத்தலேயன்றி வேறல்ல  என்று முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சென்னை சி.பி. அய். ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப் பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து சென்னை சி.பி.அய். ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறை கண் காணிப்பாளருக்கு ஆ.இராசா எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
என் மீதும் என் குடும்ப நண்பர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை RC-MA1-2015-A-0037 dated 18.08.2015. P.S. CBI, ACB, Chennai குறித்து எனது அதிர்ச்சி யைத் தெரிவிக்கவே இக் கடிதத்தை எழுதுகிறேன்.

2007_-08 காலகட்டத் தில் தொலைத் தொடர்புத் துறை உரிமங்கள் மற்றும் அலை வரிசை ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக நான் விசாரிக்கப்பட்டு வருகிறேன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
இது தொடர்பாக சி.பி.அய்., ஊழல் தடுப்புப்பிரிவு, புதுடெல்லி 21.10.2009 அன்று முதல் தகவல் அறிக்கை RC-DAI-2009-A-0045   பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அம லாக்கப்பிரிவு 09.03.2010 அன்று ECIR-31-DZ-2010  வழக்கு பதிவு செய்துள்ளது.
சி.பி.அய்., அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை ஆகிய மூன்று அமைப்புகளும் தங்களது விசாரணையை ஒருங்கி ணைக்கவும், தகவல்களை ஒருவருக்கொருவர் பரி மாறிக் கொள்ளவும் உச்ச நீதிமன்றம் மூன்று அமைப் புகளுக்கும் 16.12.2010 அன்று C.A. No. 10660 of 2010   ஆணை மூலம் உத்தரவிட் டுள்ளது. புதுடெல்லி சிறப்பு நீதிமன்ற தனிநீதிபதி முன்பு தங்களது வாக்கு மூலத்தில் சி.பி.அய்., அம லாக்கப் பிரிவு ஆகியவற் றின் விசாரணை அதி காரிகள் தாங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்து தகவல் களைப் பரிமாறிக் கொள்வதாக உறுதி செய்துள்ளனர்.
சி.பி.அய்., அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை ஆகிய மூன்று அமைப்புகளும் நடத்திய மேற்கூறிய விசாரணையில் என்னுடைய, என் குடும்ப உறுப்பினர்களுடைய, 2004-_10 கால சில குடும்ப நண் பர்களுடைய நிதி ஆவ ணங்கள், மற்றும் அசையும், அசையா சொத்துகள், ஆபரணங்கள் போன் றவை விசாரணை அதிகாரி களால் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டதுடன் 2010ஆம் ஆண்டிலேயே என்னுடைய மற்றும் என் குடும்ப உறுப்பினர்களு டைய வீடுகளிலும் சோதனை கள் நடத்தப்பட்டன.
குறிப்பாக கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் பிரை வேட் லிமிடெட் தொடர் பாக 2008ஆம் ஆண்டி லேயே தவறான செய்திகள் வெளியிடப் பட்டு அந்த விவரங்களை நான் பிரத மரிடம் தெளிவுபடுத்தி இருக்கிறேன். மீண்டும் இது சி.பி.அய்., அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகிய மூன்று அமைப்பு களால் விசாரிக்கப்பட்டு எந்தக் குற்றமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஆ.இராசாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு எதுவுமில்லை என்று 13_11_2013 அன்று தனி நீதி பதியிடம் அளித்த வாக்கு மூலத்தில் சி.பி.அய். விசா ரணை அதிகாரி விவேக் பிரியதர்சினி உறுதி செய் துள்ளார். எனவே, சி.பி.அய்., அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகிய மூன்று அமைப்பு களின் ஒன்றுபட்ட சக்தி களின் முழுமையான விசா ரணைக்குப் பின் எனக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு எதுவுமில்லை என்று வெளிப்படையாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இது குறைந்தபட்சம் 2004-_10 காலத்துக்காவது பொருந் தும்.
மீண்டும் அதே காலகட்டத்துக்கு அதே விசாரணை அமைப்பின் இன்னொரு பிரிவு மறு விசாரணை நடத்த இய லாது. மேலும் ஏற்கனவே செய்யப்பட்ட விரிவான ஆய்வைப் பற்றி கிஞ்சிற் றும் சிந்திக்காமலும் சரி பார்க்காமலும் மறு விசா ரணை நடத்த இயலாது. இது உங்களுக்கே நன்றாகத் தெரிந்த காரணங்களுக் காக, துன்புறுத்தலேயன்றி வேறெதுவுமில்லை என் பதுடன் சட்டத்தில் நியா யப்படுத்தவும் முடியாது.
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டால்- 19.08.2015அன்று எனது புதுடெல்லி வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது சி.பி.அய்.யால் கைப்பற்றப்பட்ட ஒரு ஆவணம் அமலாக்கப் பிரிவு பதிவு செய்த புகாரின் நகல் ஆகும்! இது வலதுகை செய்வதை இடது கை அறியாதது போலுள்ளது. மேற்கூறிய காரணங்களுக்காகவும், உச்ச நீதிமன்றத்தின் உத் தரவுக்குக் கட்டுப்பட்டும், சி.பி.அய்., அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகிய மூன்று அமைப்புகளும் ஏற்கனவே விசாரித்த பிரச்சினை என்பதால் அவர்கள் மேலும் விசாரணை செய்ய வேண்டியி ருந்தால் (அதற்கு அனுமதி அளிக்கப்பட்டால்) ஏற் கனவே புதுடெல்லியில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் கீழ் தான் செய்யப்பட வேண் டும் என்பதால், தங்களால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை முடிக்க தேவையான உத்தரவை அளிக்கும்படி உங்களை நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்தக் கடிதத் தில் கூறப்பட்டுள்ளது viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக