சனி, 8 ஆகஸ்ட், 2015

மரண தண்டனையை ஒழிக்க திரிபுரா தீர்மானம்

மரண தண்டனையை ஒழித்து விட்டு, வாழ்நாள் முழுவதுமான சிறைத்தண்டனையாக வழங்க வேண்டும் என்று இந்தியாவில் முதன் முறையாக திரிபுரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302, கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கிறது. “உலகம் முழுவதும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று அனைத்து சர்வதேச சமூகமும் கோரி வருகின்றது. ஐநாவின் மனித உரிமை கவுன்சிலும் மரண தண்டனையை ஒழித்து தீர்மானம் இயற்றியுள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சில நாடுகள் தவிர பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டு மரண தண்டனையை ஒழித்து விட்டன. இந்தியாவில் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் இடதுசாரி கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் முதன்முறையாக திரிபுராவின் சட்டப்பேரவையில் மரண தண்டனையை ஒழிக்கவும், அதற்கு பதிலாக கொடுங்குற்றங்களுக்கு குற்றவாளிகள் சாகும் வரை தங்களது வாழ்நாளை சிறையில் அனுபவிக்கும்படி தண்டனையை மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஏகமனதாக தீர்மானம் இயற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

சட்டமன்றத்தில் இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், மரண தண்டனை என்பது மற்றவரின் உயிர் வாழும் உரிமையை ஒருவர் பறித்து விட்டார் என்பதற்காக விதிக்கப்படும் தண்டனையாகும். இது பழிவாங்கும் உணர்வோடு அளிக்கப்படுவது என்பதால் நான் இதை ஆதரிக்க முடியாது. குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அளிப்பதே சரியான தண்டனையாகும்” என்று கூறினார்.taml.வெப்துனி.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக