புதன், 5 ஆகஸ்ட், 2015

பாலியல் படங்களைப் பார்ப்பது இயல்பானது: நாராயண ரெட்டி!

பாலியல் காணொளிகள், புத்தகங்கள், படங்கள் உள்ளிட்டவற்றைப் பார்ப்பது இயல்பான மனித நடவடிக்கை என்கிறார் பாலியல் மருத்துவ நிபுணர் நாராயண ரெட்டி. இது ஒரு மனநோயோ அல்லது வக்கிர நடவடிக்கையோ அல்ல என்று கூறும் நாராயண ரெட்டி, இதனால் மிகப்பெரிய தவறுகள் எவையும் நடப்பதில்லை என்பதால் இவற்றைத் தடைசெய்வதில் அரசுகள் தமது முழுக் கவனத்தையும் நிர்வாகக் கட்டமைப்பையும் ஏராளமான நிதியையும் செலவழிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
வயது வரம்பு இல்லாமல், யார் வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய வகையில் இயங்கி வரும் 857 ஆபாச இணையதளங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இத்தகைய இணைய தளங்களுக்குள் சிறார்கள் எளிதாக நுழைந்து பார்ப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படியே அகோரி நிர்வாண சாமியார்களையும் கஜுரா சிற்பங்களையும் தடை செய்ய வேண்டியதுதானே? 

ஆனால் இந்த காரணம் மேலெழுந்தவாரியாக நியாயமாகப்பட்டாலும் இது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று என்று கூறும் நாராயண ரெட்டி, அடுத்தவரின் பாலியல் செயலை பார்க்கும் ஆர்வம் என்பது இயல்பான மனித குணங்களில் ஒன்றே "இந்தியாவின் கஜூராஹோ கோவில் சிற்பங்களின் நவீன வாரிசே பாலியல் படங்கள்" பாலியல் படங்களை ஒட்டுமொத்தமாக ஆபாசப்படங்கள் என்று முத்திரை குத்துவது தவறு என்று கூறும் நாரயண ரெட்டி, பெரும்பான்மையானவர்கள் இவற்றைக் கண்டு கிளர்ச்சியுறுகிறார்களே தவிர குற்றம் செய்கிறார்கள் என்பதற்கு ஆய்வுரீதியில் நிரூபிக்கப்பட்ட தரவுகள் எவையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
திரைப்படங்களில் வரும் கொலை செய்யும் காட்சிகளைக் காண்பவர்கள் எல்லோரும் எப்படி கொலை செய்வதில்லையோ அதே போல் தான் பாலியல் படங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் குற்றங்களைச் செய்வதில்லை என்றும் அவர் கூறினார். ஒருவரின் குற்றச் செயல் அவர் பார்த்த பாலியல் படங்களால் மட்டுமே தூண்டப்பட்டது என்பது காவல்துறையினர் தொடர்ந்து வைக்கும் வாதமே தவிர அதை மருத்துவ உலகின் விரிவான ஆய்வுகள் எவையும் ஏற்கவில்லை என்றும் கூறினார். "ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பாலியல் படங்கள் பார்க்கிறார்கள்" தமிழ்த் திரைப்படங்களில் வரும் "குத்தாட்டப் பாடல்கள்", இரட்டை அர்த்த வசனங்களோடு ஒப்பிடும்போது பாலியல் படங்களால் வரும் பாதிப்புக்கள் என்பவை பெரிதானவை அல்லை என்று கூறும் நாராயண ரெட்டி, பெண்களுக்கான மதிப்பை சமூகத்தில் உயர்த்தவேண்டுமானால் இந்தியத் திரைப்படங்களில் வரும் பெண் எதிர்ப்பு கருத்துக்களைத் தடுப்பதில் இந்திய அரசும் அதன் தணிக்கைத்துறையும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது என்றும் தெரிவித்தார்.
இந்தியக் கலாச்சாரத்தில் மத்தியப்பிரதேசத்தின் கஜூராஹோவில் துவங்கி தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் இருக்கும் திருக்காமேசன் கோவில் வரை பரவலாக இருக்கும் பாலியல் சிற்பங்கள் எல்லாமே இந்தியாவுக்குள் பலவகையான பாலியல் காட்சிகள் பொதுவெளியில் வைக்கப்பட்டிருப்பதன் அடையாளம் என்று கூறும் நாராயண ரெட்டி, அதன் தற்கால வடிவமான பாலியல் படங்களை மட்டும் வெளிநாட்டுக்கலாச்சாரம் என்று கூறுவது சரியான அணுகுமுறையல்ல என்றும் கூறினார்.
கலாச்சாரம் என்பதே காலம் தோறும் மாறும் தன்மை கொண்டது என்பதால் இன்றைய சமூகத்தின் கலாச்சாரத்தில் இந்த பாலியல் படங்களும் ஒரு அங்கம் என்பதாக புரிந்துகொள்வதே சரியான அணுகுமுறை என்கிறார் நாராயண ரெட்டி..bbc.com/tamil
அவரது விரிவான பேட்டியை நேயர்கள் இங்கே கேட்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக