வியாழன், 6 ஆகஸ்ட், 2015

36 அடி உயர ராட்சத அலையால்தான் மத்திய பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்தது: ரெயில்வே

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகர் அருகே நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து ஒரே இடத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தடம்புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த ரெயில்வே வாரிய உறுப்பினர் குப்தா கூறியதாவது:- இந்த விபத்திற்கு பருவமழை தயார் நிலையில் இருந்தது காரணமல்ல. ஆற்றுப்படுகையிலிருந்து 13 அடி உயரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, திடீரென உருவான அசுரத்தனமான வெள்ளத்தின் காரணமாக, 36 அடி உயரமும் 200 மீட்டர் அகலமும் கொண்ட ராட்சத அலையடித்தது. இந்த ராட்சத அலையால்தான் ரெயில் தடம்புரண்டது. 1870-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தண்டவாளத்தில் இதற்கு முன்பாக இப்படி ஒரு கோரமான விபத்து ஏற்பட்டதில்லை. ஆனால், இந்த திடீர் வெள்ளத்தால் பாலத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார் maalaimalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக