ஞாயிறு, 12 ஜூலை, 2015

கோகுல இந்திரா: கருணாநிதி, ராமதாசு, வைகோ விஜயகாந்த் அல்லாரும் துரோஹிங்க?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இனத் துரோகி என்றால், திமுக தலைவர் கருணாநிதி தமிழினத் துரோகி என்று கூறியுள்ளார் அமைச்சர் கோகுல இந்திரா. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி விழா மற்றும் அ.தி.மு.க. அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவரது பேச்சிலிருந்து.. நடிகைங்க படம் போட்டா எதாவது எழுதனும்லே? இவுக சீட்டு எத்தனை நாளைக்குன்னு டென்சன்ல ஏதாவது உளறுது பாவம். 
கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளால் அதிமுக வெற்றி பெறவில்லை. அதிமுகவை வைத்தே, எதிர்கட்சியினரான விஜயகாந்த்தும், கிருஷ்ணசாமியும், கம்யூனிஸ்ட்களும் வெற்றி பெற்றார்கள். அவர்களின் நடவடிக்கைகள் சரியில்லாததால், உள்ளாட்சி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு, அதிக இடங்களை கைப்பற்றி, வரலாற்று சாதனை படைத்தது
ராமதாஸ் ஒரு இனத்துரோகி. காவிரி தண்ணீர் பிரச்னையில் தமிழக அரசை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கருணாநிதி தமிழின துரோகி. முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை விமர்சிக்கவில்லை என்றால், அவரால் இருக்க முடியாது
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அங்கீகாரம் கொடுத்ததே அதிமுகதான். ஈழப் பிரச்னையை வைத்து அரசியல் செய்து வந்த அவர், இப்போது முல்லை பெரியாரை வைத்து அரசியல் பண்ணுகிறார்.
நடிகை குஷ்புவை வைத்து அரசியல் பண்ணும் இளங்கோவன், முன்பு மத்திய இணை அமைச்சராக இருந்தபோது என்ன நலத் திட்டங்களை கொண்டு வந்தார் என்று சொல்லமுடியுமா?
Read more at:/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக