வியாழன், 23 ஜூலை, 2015

பெண்களை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி


உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றுக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் நிலத்தை மீட்க அங்கு சென்றபோது, ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி ஆத்திரம் அடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனது இடுப்பில் துப்பாக்கியை சொருகியபடி டிராக்டரில் ஏறிய அவர், அந்த பெண்களை நோக்கி டிராக்டரை இயக்கி கொல்ல முயன்றுள்ளார். இந்த கொடூர தாக்குதல் நடந்த இடத்திற்கு எதிரே மாவட்ட ஆட்சியரின் வீடு அமைந்துள்ளது. தகராறு ஏற்பட்டு நீண்ட நேரம் ஆன பிறகே போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்தனர். பெண் ரவுடி போல் நடந்துகொண்ட ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவியை மரியாதையுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் போலீசார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக