புதன், 22 ஜூலை, 2015

இந்தியாவுக்கு ரூ.645 கோடி வருவாய் ! 45 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதால்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ பிற நாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை 19 நாடுகளுக்கு சொந்தமான 45 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளதாகவும், அதன்மூலம் ரூ.645 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் பாராளுமன்றத்தில், மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.2017–ம் ஆண்டுக்குள், இன்னும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவ உள்ளதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.2017–ம் ஆண்டில் இருந்து 2020–ம் ஆண்டுக்குள், ரூ.3 ஆயிரத்து 90 கோடி மதிப்புள்ள 15 சிறியரக பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனங்களை வடிவமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக