வெள்ளி, 26 ஜூன், 2015

சமசீர்கல்வி தேசியமயம் or காவிமயம் ? அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம்! பாஜக புதிய கொள்கை ஆய்வு?

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல வகை பாடத்திட்டங்கள் உள்ளன. இதில், உயர்கல்வி படிப்புகள் மட்டும், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகக் கட்டுப்பாட்டில் அமலாகின்றன. ஆனால், பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் தனித்தனியே இருக்கின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய கல்விக் கொள்கை வரைவு விதிகளை, மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. 


மாற்றம்:இதன்படி, 20 அம்சங்களில் மாற்றம் வரவுள்ளது:
l கல்வித்தரத்தை உயர்த்துதல்; கல்வி நிறுவனங்களின் தர மதிப்பீட்டு முறையில் மாற்றம் கொண்டு வருதல்; மத்திய பல்கலைகளை அதிகரித்தல்; மாநில பல்கலைகளின் தரத்தை மேம்படுத்துதல்.
l உயர்கல்வியில், மாணவர்களின் திறன் வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம்; நாடு முழுவதும் திறந்தவெளி மற்றும் ஆன்லைன் படிப்புக்கு முக்கியத்துவம் அளித்தல்; தொழில்நுட்ப வசதிகளை மேம்
படுத்துதல்; மாநில அளவில், மண்டல அளவில் பாகுபாடுகள் இல்லாத, ஒரே பாடத்திட்டம்; மிகச்சிறந்த ஆசிரியர்களை
உருவாக்குதல்.
l தனியார் நிறுவனங்களுடன் இணைந்து புதிய பாடத்திட்டம் உருவாக்குதல்; தொழில் துறை
களுடன் இணைந்து நவீன தொழிற்கல்விப் பாடங்களை புகுத்துதல்; ஆய்வுப் படிப்புகளை அதிகரிப்பது; சர்வதேச அளவில் இந்திய உயர்கல்வி முறையை மாற்றுவது.
இத்தனை அம்சங்கள், புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்று உள்ளன.
உத்தரவு
இந்த கல்விக் கொள்கையின் விரிவான தகவல்கள், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு
உள்ளன.
இந்த கொள்கை குறித்து, அனைத்துக் கல்லுாரிகள், பல்கலைகள் சார்பில், தங்கள் கருத்துக்களை, ugc.nep@gmail.com என்ற முகவரிக்கு, ஜூலை 24ம் தேதிக்குள், இ-மெயிலில் அனுப்ப வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

2.75 லட்சம் பேர் கருத்து பதிவு
மத்திய அரசின், தற்போதைய கல்விக் கொள்கை, 1986ல் கொண்டு வரப்பட்டு, 1992ல் மாற்றப்பட்டது. தற்போது மக்கள்தொகை அதிகரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி தேவை போன்றவைகளின் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்படுகிறது.
இதில், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் மூலம், தினமும், ஆன்லைன் வழியே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இதில், பொதுமக்களும்,
கல்வியாளர்களும் பங்கேற்கலாம்.
இதுவரை, 2.75 லட்சம் பேர், புதிய கல்விக் கொள்கை குறித்து தனித்தனியே கருத்து கூறியுள்ளனர்.
ஆன்லைன், டி.டி.எச்., முறையில் கல்வி
தற்போது, ஆன்லைன் கல்வி பிரபலமடைந்துள்ளதுடன், சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆன்லைன் படிப்புக்கு பல்கலைகளில் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.
எனவே, ஆன்லைன் மற்றும் திறந்தவெளி தபால் வழிக் கல்வியை அதிகரிக்க வேண்டும். முதற்கட்டமாக, மனிதவள மேம்பாடு, சமூக அறிவியல், பண்பாடு போன்றவற்றில் படிப்புகளை அறிமுகம் செய்யலாம். வீடியோ பாடங்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் வகுப்புகள் எடுக்கலாம்.
ஆன்லைன் வசதியில்லாத கிராமங்கள் அல்லது அனைத்துப் பகுதிகளுக்கும், டி.டி.எச்., வசதி அளித்து, பாடங்கள் நடத்தலாம் என, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒழுங்காக பாடம் நடத்தாத ஆசிரியரை என்ன செய்யலாம்?

புதிய கல்விக் கொள்கையில்
சில விவாதங்களும்
கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
1 பல்கலை விதிகளில் மாற்றம் வேண்டுமா?
2 துணைவேந்தர் நியமனத் தில் தேடல் குழு முடிவு தேவையா?
3 கல்லுாரிகளின் அதிக செலவுக்கு, கல்லுாரி முதல்வர் மீது பொறுப்பு கொண்டு வரலாமா?
4 ஒழுங்காக பாடம் நடத்தாத ஆசிரியரை, என்ன
செய்வது; பணியிட மாற்றம் செய்யலாமா; கவுன்சிலிங் தரலாமா அல்லது நீக்கி
விடலாமா; நீக்க முடி
வெடுத்தால், அதற்கு உங்கள் ஆதரவு உண்டா?
5 ஆசிரியர்களின் பயிற்சிக் காலத்தை ஐந்து ஆண்டு
களாக அதிகரிக்கலாமா?


ஏழை மாணவர்களுக்கு தனி கட்டண முறை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, மத்திய அரசு
சில கேள்விகளை கேட்டுள்ளது. அதில் ஒன்று:
l மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை ஒழுங்கு
படுத்த என்ன செய்யலாம்?
இதற்கான பதில்களில் ஏதேனும் ஒன்றை 'டிக்' செய்யவேண்டும்:
1 பல்கலை இணைப்பு முறையை மாற்றலாம்.
2 வெளிப்படையான நிர்வாகம் கொண்டு வந்து, கல்வி நிறுவனங்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.
3 வருவாய் அதிகம் உள்ள, தகுதியுடைய மாணவர்களுக்கு உரிய கட்டணம்; ஏழை மாணவர்களுக்கு, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கலாம்.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக