செவ்வாய், 23 ஜூன், 2015

அருந்ததி ராய்:இந்துஅமைப்புக்கள் அம்பேத்காரை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது

சமீபத்தில் சென்னையில் அருந்ததிராய், டாக்டர் அம்பேத்கரை இந்து அமைப்புகள் பயன்படுத்துவதைக் கண்டித்தும், அண்ணல் அம்பேத்கரை இந்து எதிர்ப்புக் குறியீடாகப் பயனபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் – காந்தியை டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியதையும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இததான் நான் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். அப்போதெல்லாம் என்னை ஒரு மாதிரி பார்த்தவர்களும், ஒரு மாதிரி பார்க்கக்கூட விரும்பாதவர்களும், அப்படி இயங்கியதற்காகவே என்னை ஓரங்கட்டியவர்களும், அண்ணலை மோசமாக விமர்சித்தவர்களும்கூட, அருந்ததிராய் பேச்சைக் கொண்டாடுகிறார்கள். மகிழ்ச்சி.
(டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கிற முற்போக்காளர்களைக் கண்டித்து எழுதியதற்காகவே, 2008 ஆம் ஆண்டு கீற்று இணையதளத்தில் என்னை இந்திய உளவுத்துறையின் ஆள் என்று எழுதினார்கள்.)
என்னைய விடுங்க.. அருந்ததிராயே சொல்லிட்டாங்க, இப்பவாவது டாக்டர் அம்பேத்கரை இந்து எதிர்ப்பு போர்வாளாகத் தலித் மக்களிடம் தீவிரமாகக் கொண்டு சேர்ப்பதும், தலித்தல்லாதவர்களிடம் அண்ணல் அம்பேத்கரின் அரசியலை பேசவும் செய்யலாமே.

வெறுமனே அருந்ததிராயின் கருத்தாக அதை தமிழில் சொல்லிவிட்டு வழக்கம்போல் நமக்கிருக்கிற பல்வேறு ‘மிக‘ முக்கியமான வேலைகளை ‘சிறப்பு’டன் செய்து கொண்டிருந்தால்.. ‘ஆர்.எஸ்.எஸ். காரன் அம்பேத்கர் விழா’ கொண்டாடுவதை வேடிக்கைத்தான் பார்க்க முடியும்.mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக