வெள்ளி, 1 மே, 2015

சோனியா அகர்வாலின் பெருந்தன்மையை போற்றி புகழும் விவேக்

விவேக், பாக்யராஜ், சோனியா அகர்வால், ராஜேந்திரன், மனோபாலா, ஆர்த்தி, செல் முருகன், இம்மான் அண்ணாச்சி என காமெடி நடிகர்கள் பட்டாளம் சங்கமம் ஆகியிருக்கும் திரைப்படம் பாலக்காட்டு மாதவன். சந்திரமோஹன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீடு சமீபத்த்ல் நடைபெற்றது. அதில் விவேக் பேசிய போது : கதாநாயக நடிகைகள் எல்லாருமே தங்கள் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றால் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பேட்டி யெல்லாம் கொடுப்பார்கள். ஆனால் காமெடியே வாழ்க்கையாக, சிரிக்க வைப்பதையே தொழிலாக உள்ள ஒரு காமெடியன் கூட நடிக்க மட்டும் வர மாட்டார்கள். ஆனால் என் படத்தில் என்னுடன் நடிக்க சோனியா அகர்வால் சம்மதித்தார் .அதற்காக சோனியா அகர்வாலுக்கு நன்றி. அது மட்டுமல்ல. அவருடன் நடிக்கும் போது அவரது இடுப்பை நான் கிள்ளுவது போன்ற காட்சி இருந்தது. அப்படி நடிக்க நான் தயங்கினேன். கூச்சப்பட்டேன். ஆனால் சோனியா அகர்வால் கூச்சப்பட வேண்டாம் கிள்ளுங்க நடிப்பு தானே என்றார்.
தைரியம்கொடுத்தார். 'இனி இது உங்க ஏரியா தாராளமாக கிள்ளுங்க' என்றார். அப்புறம் என்ன? அது போதாதா எனக்கு? தமிழனுக்கு கோடு போட்டாலே ரோடு போடத் தெரியாதா என்ன? பிறகு நானும் புகுந்து விளையாடி விட்டேன்” என்று கூறினார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக