வெள்ளி, 8 மே, 2015

தஸ்லிமாவை தண்டிக்க முடிந்தவர்களுக்கு ஏன் சல்மான்கான்களை ஒன்றும் செய்ய முடியவில்லை

Salman-Khan-six-pack-abs-Bodyகான்’ பரம்பரையின் மாவீரன், சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டி, சாலையில் படுத்திருந்த நூருல்லா வைக் கொன்றார். முகம்மது கலீமை நொண்டியாக்கினார்.
தற்செயலாக இந்த 3 பேருமே இஸ்லாமியர்கள் தான். ஆனாலும் கொலைகார சல்மான்கான்கானுக்காகக் கண்ணீர் சிந்துகிறவர்கள், கொலையுண்ட ஏழைகள் குறித்துக் கருத்துக்கூடச் சொல்ல மறுக்கிறார்கள்; இந்து – முஸ்லிம் ஒற்றுமையோடு.
‘காரை நான் தான் ஓட்டினேன்’ என்று சல்மான்கானுக்காகக் கொலைக்குற்றத்தை ஏற்றுக் கொண்டு பொய் சாட்சி சொன்ன அசோக் சிங் ஒரு இந்து. என்னடா உங்க மனிதாபிமானம்?
இது மனிதாபிமானமல்ல? வர்க்க அபிமானம்.

அதுசரி. வட்டிக்கு விடுவது, ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது, திரைப்படத்தில் குறைந்த உடைகளுடன் ஆட்டம் போடுவது. இஸ்லாமிர்களுக்கு எதிரான படத்தில் இசையமைப்பது,
சட்டையை கழட்டி விட்டு பெண்களுக்காக கவர்ச்சிக் காட்டுவது, ‘ஜாக்கெட்டுகுள்ளே என்ன இருக்கு?’ என்ற பாட்டுப்பாடி ஊதாரித்தனமாக நடித்து ஊரை சூறையாடுவது, குடிபோதையில் இருப்பது, அதோடே காரை ஓட்டுவது, ஓட்டி ஆளைக் கொல்வது இதற்கெல்லாம் இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா என்ன?
இந்திய அரசியல் சட்டம் சல்மான்கானுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது. இஸ்லாமியச் சட்டம் என்ன செய்யப்போகிறது? பத்வா வழங்குமா?
குறைந்தபட்சம் அவரை இஸ்லாமியர் இல்லை என்றாவது அறிவிக்குமா? மதத்திலிருந்து விலக்கி வைக்குமா?
தஸ்லிமாவை தண்டிக்க முடிந்தவர்களுக்கு ஏன் சல்மான்கான்களை ஒன்றும் செய்ய முடியவில்லை?
மதத்திற்கு எதிராக நேரடியாகக் கருத்துச் சொன்னால்தான் தவறு. மதக் கருத்துக்களுக்கு எதிராக தீவிரமாக வாழ்வது கூட தவறில்லை என்று ஏதாவது முடிவிருக்கிறதா  mathimaran.wordpress

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக