வெள்ளி, 8 மே, 2015

பிரிட்டனில் ஆளும் கன்செவேடிவ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது!

பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து முன்னேறி வருகிறது. இது வரை தெரிந்த சுமார் 540 தொகுதிகளுக்கான முடிவுகளில் கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 325 இடங்களில் வென்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு இதுவரை 216 இடங்களே கிடைத்துள்ளன. ஸ்காட்லாந்தின் ஆளும் பிராந்தியக் கட்சியான, ஸ்காட்லாந்து தேசியக் கட்சி அந்த மாகாணத்தின் 59 தொகுதிகளில் 55 இடங்களை வென்று நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது.
இதுவரை ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சியும், நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாகவும் இருந்த லிபரல் ஜனநாயகக் கட்சி படுதோல்வியை சந்தித்து வருகிறது.
பிரதமர் டேவிட் கேமரன் அவரது விட்னி தொகுதியில் வெற்றி அடைந்துள்ளார்.  Ranil Jeyavardana என்ற சிங்களவர கொன்செவேர்டிவ் வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். உமா குமரன் என்ற தமிழ் பெண் தோல்வியை தழுவியுள்ளார்.

லிபரல் ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வின்செண்ட் கேபிள் மற்றும் முன்னாள் அமைச்சர் எட் டேவி, முன்னாள் தலைமை கருவூல செயலர் டேனி அலெக்ஸாண்டர் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
ஆனால் லிபெரல் ஜனநாயகக் கட்சியின் தலைவ்ர் நிக் கிளெக் தனது ஷெபீல்ட் ஹாலம் தொகுதியில் வென்றுள்ளார்.
ஸ்காட்லாந்தில் ஸ்காட்லாந்து தொழிற்கட்சி தலைவர்கள் ஜிம் மர்பி, டக்ளஸ் அலெக்ஸாண்டர் ஆகியோர் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியிடம் தோல்வியடைந்துள்ளனர்.
தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரன் " கன்சர்வேடிவ் கட்சியின் பொருளாதாரத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒற்றுமைக்குப் பாடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளிப்பதாக தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் தெரிவித்திருக்கிறார். bbc.co.uk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக